டயரி எழுதப் போறேன், டயரி!

டயரி என்றால் என்ன? ஒருவரின் அனுபவங்கள், எண்ணங்கள், ரசனைகளின் பதிவுகளே டயரி. அவற்றை மற்றவரும் படித்தால்தான் என்ன குடி முழுகிப் போய்விடும்? அப்படிப் பிறர் படிக்கக் கூடாதவற்றை டயரியில் எழுதி வைத்தாலும் ஆபத்துதான்.

இது என் டயரி. எல்லோரும் படிக்கலாம். இதில் உருப்படியான விஷயம் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ரசிப்பதற்கு ஏதேனும் இருக்குமானால் ரசியுங்கள். ஒன்றும் இல்லை என்றால் இங்கே வந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.

தினசரியே ஏதேனும் சில வரிகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

நான் சாதாரண நாளிலேயே இரண்டு மாதம் சேர்ந்தாற்போல் டயரி எழுதியதில்லை. ஆனால் இந்த மின் டயரியை தொடர்ந்து எழுதுவேன் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். கொஞ்சமாகத்தான் அறுப்பேன்.

சரி, நாளை சந்திப்போம்.

*****
வாக்குறுதிகள் குழந்தைகளைப் போன்றவை. உருவாக்குவதுசந்தோஷமானது; வெளியிடுவது சிக்கலானது; காப்பாற்றுவதுதான்கடினமானது!

0 comments: