அனும்மா









னுராதா ரமணன் மறைந்துவிட்டார் என்று கேள்விப் பட்டபோது நம்பவே முடியவில்லை. மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கும் மேலாக இருந்திருக்கிறார். வேறு யாராவதாக இருந்தால், 'அடடா! இறந்துவிட்டாரா... பாவம், நல்ல மனிதர்!' என்று மாளாத வருத்தத்தோடு, அவரது மரணத்தை அங்கீகரித்திருப்போம். ஆனால், மருத்துவமனைக்குப் போய் வருவதையே ஏதோ உல்லாசப் பயணம் சென்று வருவதைப்போல உற்சாகமும் மகிழ்ச்சியுமாகப் பகிர்ந்துகொள்கிறவர் ஆயிற்றே அனுராதா ரமணன்!

எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் எழுதிப் புகழ்பெற்று இருந்தாலும், தன்னை மிகப் பரவலான அளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது, ஆனந்த விகடனில் வெளியான 'சிறை' சிறுகதைதான் என்று நன்றியோடு நினைவுகூர்வார் அனுராதா ரமணன். அது பின்னர் திரைப்படமாகவும் வெளியாகி, வெற்றிகரமாக ஓடியது.

கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு; இரு வாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் என ஏராளமான நாவல்களை எழுதியுள்ளவர் அனுராதா ரமணன். இவற்றில் பல திரைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன. பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் என இவரது கதைகள் மெகா சீரியல்களாகவும் வெளியாகியுள்ளன. 'ஒக பார்ய கதா' என்கிற இவரது தெலுங்குத் திரைப்படம், ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றது. 'நாவல்களின் ராணி' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருந்தபோதிலும், தான் பெரிய எழுத்தாளர் என்கிற கர்வமோ, பந்தாவோ அவரின் பேச்சில் துளியும் தொனிக்காது. நட்பு வட்டாரத்துக்கு அவர் எப்போதும் 'அனும்மா'.

ஓவியத்தில் நாட்டமும், நல்ல தேர்ச்சியும் உள்ளவர் அனுராதா ரமணன். சமீபத்தில் அவர் வரைந்த பெருமாள் படம், அவர் வீட்டுச் சுவரில் தரிசனம் தருகிறது. சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்து திறம்பட நடத்தியுள்ளார். சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. டிசம்பர் சீஸனின்போது, காமேஸ்வரி அய்யர் என்கிற பெயரில், விகடனில் சங்கீத விமர்சனக் கட்டுரைகள் எழுதியதும் இவர்தான்.

மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் பலர் இவரைத் தேடி வந்து, தங்கள் மனக் குறைகளைச் சொல்லி அழுவார்கள். அவர்களைத் தேற்றி, தைரியம் கொடுத்து, உற்சாகப்படுத்தி அனுப்பும் பணியையும் செய்துவந்தார். பலரின் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வழிகாட்டி உதவிய அனுராதா ரமணனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. அதில் பல வேதனைகளைச் சந்தித்தார். உடல் உபாதைகளும் ஏராளம். இதய நோய், சிறுநீரக நோய், ரத்த அழுத்தம், டயாபடீஸ், பக்கவாதம் என இவரைத் தாக்காத நோய்களே இல்லை. ஆனால், அத்தனைக்கும் ஈடுகொடுத்து, எழுத்துப் பணியையும் தொடர்ந்துகொண்டு, கடைசி வரையில் கலகலவென்று சிரித்துப் பேசிக்கொண்டு, நர்ஸ்களிடம் ஜோக் அடித்துச் சிரித்துக்கொண்டு இருந்த பெண்மணி. கலங்கிய தன் மூத்த மகளைத் தட்டிக்கொடுத்துப் புன்னகைத்தபடியே அனுராதா ரமணன் பேசிய கடைசி வார்த்தைகள்... ''தைரியமா இரு! பி பாஸிட்டிவ்!''

தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார். தன் மருத்துவமனை அனுபவத்தைச் சிரிக்கச் சிரிக்க எழுதிய அனும்மாவின் ஆன்மா, இந்தக் கடைசி அனுபவத்தையும் எப்படி நகைச்சுவையோடு எழுதலாம் என்றுதான் இப்போது யோசித்துக்கொண்டு இருக்கும்!

(ஆனந்த விகடன் 26.5.10 இதழில் வெளியான கட்டுரை.)

15 comments:

Rekha raghavan said...

அனும்மாவின் கதைகளை விரும்பிப் படிப்பவன். அவரின் இழப்பு பத்திரிகை உலகத்துக்கு குறிப்பாக வாசகர்களுக்கு பேரிழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

சௌந்தர் said...

இந்த பதிவுக்கு நன்றி

ஜெய்லானி said...

:-((

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவரது blood group B positive ஆகத் தான் இருந்திருக்கும். அவரது மறைவையும் நாம் sportive ஆகவே எடுத்துக் கொள்வோமாக..அதுவே அவரது ஆன்மாவிற்கு நாம் அளிக்கும் மிகச்சிறந்த அஞ்சலி ஆக இருக்க முடியும். மேலும் அவர் தம் குடும்பத்தினருக்கு நம் வார்த்தை..அனும்மா வேறெங்கும் போகவில்லை..அவர்தம் எழுத்துக்களில் வாழ்கிறார்..வாழ்ந்து கொண்டிருக்கிறார்..வாழ்ந்து கொண்டே இருப்பார் எந்நாளுமே !!

Chitra said...

May her soul rest in peace!

கே. பி. ஜனா... said...

எத்தனை சரளமாக எழுதுகிறவர்! எத்தனை பேருக்கு வழி காட்டியவர்! நமக்கு எத்தனை பெரிய இழப்பு!

kalyani said...

Anuradhavin kathagalai virumbi padippaval.avarin aathma santhiyadaiya kadavulai prarthikkiren.

Anonymous said...

http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138,html

Guru.Radhakrishnan said...

I read this article in the dcurrent ANANDA VIKATAN. Really it is a condolenca message of famous writer QAnuradha Ramanan that have been published in favor of her followers and readers. My heartfull condoleance messagege has already been recorded by me. Anyway I appreciate y6our article published in vikatan.

+Ve Anthony Muthu said...

//தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார். தன் மருத்துவமனை அனுபவத்தைச் சிரிக்கச் சிரிக்க எழுதிய அனும்மாவின் ஆன்மா, இந்தக் கடைசி அனுபவத்தையும் எப்படி நகைச்சுவையோடு எழுதலாம் என்றுதான் இப்போது யோசித்துக்கொண்டு இருக்கும்!//

ஆம். நெகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி.

IKrishs said...

அனுராதா அவர்களின் வித்தியாசமான கதையமைப்பில் நாகா இயக்கத்தில் உருவான bachelors party (micro) தொடர் நான் மிகவும் ரசித்த தொடர் .
வீட்டில் வைத்து அத்தொடரை பார்க்க பயங்கர எதிர்ப்பு .அந்த அளவுக்கு பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிறைந்த சிந்தனையை தூண்டும் தொடர் அது .
மற்றபடி , அனுராதா அவர்களின் படைப்புகள் பரவலாக புத்தக வடிவில் கிடைக்க வேண்டும் .எழுத்தின் வழி என்றென்றும் அவர் நம்மோடு வாழ்வார்

ungalrasigan.blogspot.com said...

பின்னூட்டங்களை உடனடியாகப் படித்து நன்றி தெரிவிக்க இயலாததற்காக முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரேகா ராகவன், சௌந்தர், ஜெய்லானி, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, சித்ரா, கே.பி.ஜனார்த்தனன், கல்யாணி, மதுரைக்காரன், அந்தோணிமுத்து, கிருஷ்குமார் ஆகிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!

ungalrasigan.blogspot.com said...

ஹேராம்! மறைந்தவரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே நினைவுகூர்தல் நல்ல மரபு! தங்களின் பின்னூட்டத்தைப் பதிவிட இயலாமைக்கு மன்னிக்கவும்! ஹே ராம்!

ungalrasigan.blogspot.com said...

விருது கொடுத்து என்னைக் கௌரவித்தமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி! :)

கணேஷ் ராஜா said...

உங்கள் ரசிகன், என் டயரி ஆகிய உங்களின் இரண்டு பிளாகையும் வேலைப் பளு காரணமாக அவ்வப்போதுதான் நேரம் இருக்கும்போது மொத்தமாகப் படிக்கிறேன். எனவே உங்களின் பழைய பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும். நான் அனுராதாரமணின் வாசகன். அவரின் மறைவு அதிர்ச்சியானது. உங்களின் இந்தக் கட்டுரையை விகடனில் படித்தபோது உங்களின் ஈ-மெயிலுக்குப் பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.