முயற்சி திருவினை ஆக்கியது!

ஜோக் எழுத்தாளர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தமான 30 ஜோக்குகளை வெளியிட்டு, அவற்றிலிருந்து ஐந்து பேரை தேர்ந்தெடுக்கச் சொல்லி என் வலைப்பூ நேயர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தேன். பின்னூட்டம் மூலம் தங்களுக்குப் பிடித்த ஐந்து ஜோக்காளர்களுக்கு ஓட்டளித்து, இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டிக்கான பின்னூட்டங்களை எந்தப் பதிவில் இட வேண்டும் என்று நான் குறிப்பு எதுவும் கொடுக்காததால், ‘படிங்க, சிரிங்க, பரிசை வெல்லுங்க’ என்கிற பதிவிலும், ‘தேர்ந்தெடுங்கள் ஐவரை! - ஒரு போட்டி’ என்கிற பதிவிலுமாகக் கலந்து தங்கள் பின்னூட்டங்களை இட்டிருக்கிறார்கள். இரண்டையுமே கணக்கில் எடுத்துக்கொண்டேன்.

ஓரியூர் கே.சேகர் பெயருக்கு ஓட்டளித்திருப்பவர்கள் மொத்தம் 12 பேர்; அவருக்கு அடுத்தபடியாக தஞ்சை தாமு பெற்றிருக்கும் ஓட்டுக்கள் மொத்தம் 11; அவருக்கு அடுத்து வி.சாரதிடேச்சு, சி.பி.செந்தில்குமார் இருவரும் தலா 10 ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்கள். கடைசியாக, சாதிக் 9 ஓட்டுக்கள் வாங்கி இந்த டாப்-5 பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆக, திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் இந்த மே மாதம் நடத்தவிருக்கும் விழாவில், தமது அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை மூலம் ரூ.250 அன்பளிப்பு அளித்துக் கௌரவிக்க இருக்கும் ஐந்து நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்கள், நமது ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஓரியூர் கே.சேகர், தஞ்சை தாமு, வி.சாரதிடேச்சு, சி.பி.செந்தில்குமார் மற்றும் சாதிக் ஆகிய ஐந்து பேர்தான்!

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை நடத்தவிருக்கும் விழா எப்போது, எங்கே போன்ற விவரங்களைப் பிறகு திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஜோக்காளர்கள் ஐந்து பேருக்கும் பரிசு அறிவிப்பு பற்றி மேற்படி அறக்கட்டளை மூலமே தகவல் வரும்.

இனி, அந்த ஐந்து பேரையும் மிகச் சரியாகக் குறிப்பிட்டு, புத்தகப் பரிசு பெறும் ‘என் டயரி’ வாசகர் யாரென்று பார்ப்போம்.

முதல் ஐந்து இடங்களைப் பிடித்த ஐந்து ஜோக்காளர்களையும் மிகச் சரியாகக் குறிப்பிட்டவர்கள் எவரும் இல்லை.

நான்கு பேரை மட்டும் சரியாகக் குறிப்பிட்டு, மீதி ஒருவர் பெயரை மாற்றிக் குறிப்பிட்டவர்கள் மொத்தம் 6 பேர்.

அவர்கள்... வி.ராஜசேகரன், விழுப்புரம்; கே.பரணீதரன் (பரணீ); புலவர் இரா.முத்தையா, கடலூர்; கிருபாநந்தினி; கே.ராஜலட்சுமி, பெங்களூரு; கணேஷ்ராஜா.

இவர்கள் ஆறு பேரில், ‘தேர்ந்தெடுங்கள் ஐவரை!’ பதிவில், நிபந்தனை எண் 11-ன்படி புத்தகப் பரிசு பெறுபவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ராஜசேகரன். காரணம், அவர்தான் அதிகபட்ச சரியான விடைகளை அனுப்பிய ஆறு பேரில் அனைவருக்கும் மிக முன்னதாக, ஏப்ரல் 15-ம் தேதியே அனுப்பியவர்.

புத்தகப் பரிசு பெறுபவர் யார் என்று முடிவு செய்வதற்குள்ளாக, இவர் அளித்திருந்த விடையை அவசரப்பட்டுப் பதிவிட்டுவிட்டேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு, அதை நீக்கியிருக்கிறேன். அதற்குக் காரணம் இருக்கிறது.

ன்புள்ள திரு. வி.ராஜசேகரன் அவர்களுக்கு,

வணக்கம். போட்டியில் கலந்துகொண்டு, அதிகபட்ச சரியான விடைகளை முதலாவதாக அனுப்பிப் புத்தகப் பரிசு வென்ற தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

தாங்கள் எந்த ஐந்து ஜோக்காளர்களுக்கு ஓட்டளித்தீர்களோ, அவர்கள் ஐந்து பேர் பெயரையும் மீண்டும் ஒருமுறை எழுதி, தங்கள் முழுமையான அஞ்சலக முகவரியையும் எழுதி, nraviprakash@gmail.com என்கிற எனது இ-மெயில் முகவரிக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.


தாங்கள் முன்பு பின்னூட்டத்தில் ஓட்டளித்து அனுப்பிய அந்த ஐந்து பேர் பெயரையும் மீண்டும் ஒருமுறை எழுதச் சொல்வதற்குக் காரணம், அதை பழைய உங்கள் ரசனையோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘கிராஸ் செக்’ செய்து கொள்வதற்காகவே! சரியான முகவரிக்கு, சரியான நபருக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே!


தங்களுக்கான பரிசுப் புத்தகம், ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’ தயாராக இருக்கிறது. தங்கள் கடிதம் கிடைத்த அன்றைய தினமே அது கூரியரில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்தப் பதிவைப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக தங்கள் முகவரியை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ‘தேர்ந்தெடுங்கள் ஐவரை’ பதிவில், நிபந்தனை எண் 13-ஐப் பார்க்கவும்.

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்.
***

தோல்வி கசக்காது - அதை நீங்கள் விழுங்காத வரை!

9 comments:

மதுரை சரவணன் said...

good .v should appreciate alls job . and for selection also.

K.B.JANARTHANAN said...

வெற்றி பெற்றவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Chitra said...

Job well done! :-)
Congratulations to everyone!

பத்மநாபன் said...

உங்கள் சுறுசுறுப்பான அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள் ... வெற்றி பெற்ற ஜோக்காளர்களுக்கும், பரிசிற்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர்க்கும் வாழ்த்துக்கள் ..//அதை பழைய உங்கள் ரசனையோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘கிராஸ் செக்’ செய்து கொள்வதற்காகவே! /// இதிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்தது
நல்ல சுவாரஸ்யம்.

பத்மநாபன் said...

உங்கள் சுறுசுறுப்பான அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள் ... வெற்றி பெற்ற ஜோக்காளர்களுக்கும், பரிசிற்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர்க்கும் வாழ்த்துக்கள் ..//அதை பழைய உங்கள் ரசனையோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘கிராஸ் செக்’ செய்து கொள்வதற்காகவே! /// இதிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்தது
நல்ல சுவாரஸ்யம்.

ரவிபிரகாஷ் said...

திருவாளர்கள் மதுரை சரவணன், கே.பி.ஜனார்த்தனன், சித்ரா, பத்மநாபன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

எனது ஒவ்வொரு பதிவையும் படித்துவிட்டு உடனுக்குடன் தமிழிஷ்-ஷில் ஓட்டளித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி எப்போதும் உண்டு!

கிருபாநந்தினி said...

எனக்குப் புத்தகப் பரிசு இல்லைன்னாலும், அடுக்குத் தகுதியான ஆறு பேரில் ஒருத்தியா தேர்வானதே மகிழ்ச்சியா இருக்கு. வெற்றி பெற்ற விழுப்புரம் ராஜசேகரனுக்கு வாழ்த்துக்கள்!

வி.ராஜசேகரன் said...

சார், வணக்கம். எனக்குப் புத்தகப் பரிசு கிடைச்சதைப் படிச்சு ரொம்ப சந்தோஷம். நான் என் பிஸினஸ் விஷயமா மும்பை போயிருந்ததால, உங்க பிளாகைப் பார்க்க முடியலை. தேங்ஸ் சார்! கீழே என் முகவரி கொடுத்துள்ளேன். எனது ஈ-மெயில் முகவரி: bhadran1972@gmail.com

Baranee said...

Hello sir,

Happy to be selected in final list. Congratulation to the winner.

Thank you also for your service like this.

Hope to win in next contest :-)

Regards,
K.Baraneetharan,
Bangalore