பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்!

பொன்னியின் செல்வன்- வாசிப்பு அனுபவம்

பேராசிரியர் அமரர் கல்கியின் எழுத்தாற்றல் பற்றிச் சிலாகித்துச் சொல்லவும் ஒரு தகுதி வேண்டும். அது எனக்கில்லை. என்றாலும், அவரது பொன்னியின் செல்வன் நாவல் முழுவதையும் சமீபத்தில் படித்துச் சிலிர்த்தவன் என்கிற முறையில், சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.

அமரர் கல்கியின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை ராமாயண, மகாபாரத இதிகாசங்களுக்கு நிகராக வைத்துப் போற்றத்தக்கவை. இன்றைக்கு அவற்றை எடுத்துப் படித்தாலும், அவற்றில் அமரர் கல்கி கையாண்டுள்ள வசீகரமான நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், ஒரு மாயச் சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவது போன்ற கதைப் பின்னல்களும் நம்மை அப்படியே கட்டிப்போடுவதை உணரலாம்.

குறிப்பாக, சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம்!

பல நூற்றாண்டுகளுக்கு முன், சோழர் காலத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்களை அருகே இருந்து பார்த்தது போல, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக அவர் விவரித்திருப்பதைப் படிக்கப் படிக்கப் பிரமிப்பும் பரவசமும் ஏற்படுகிறது. அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், யுத்த வியூகங்கள், சதியாலோசனைகள் எனப் படிக்கப் படிக்க, விறுவிறுப்பான ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற படபடப்பு ஏற்படுகிறது. எந்தெந்தச் சம்பவங்கள் நிஜ சரித்திரம், எவையெவை கற்பனைச் சம்பவங்கள், யார் யார் சரித்திர புருஷர்கள், எவரெல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! புத்தகத்தை முடித்துக் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும், இன்னமும் என் மனசுக்குள் சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன் என்கிற ராஜ ராஜசோழன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர்கள், பார்த்திபேந்திரன், கந்தமாறன், பூங்குழலி, மணிமேகலை என அத்தனைச் சரித்திரப் புருஷர்களும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.

அமரர் கல்கி படைத்த கதாபாத்திரங்களை நம் கண் முன்னே உலவவிட்டு, அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறோமா, நம் காலத்தில் அவர்கள் வாழ்கிறார்களா என்கிற மயக்கத்தைத் தரும்படியாக, அத்தனை உயிர்ப்போடு வடித்துக் கொடுத்த ஓவிய மேதை மணியம் அவர்களின் பங்கும் பிரமிக்க வைப்பது.

பொக்கிஷம் - என்னுரை

ந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை கலந்த பார்வையோடு அணுகுவதன் மூலம், அதில் உள்ள நல்லது கெட்டதை மக்களுக்குத் தெளிவாகவும் சுலபமாகவும் புரிய வைக்கமுடியும். அப்படி ஒரு நோக்குடன், எல்லோரையும் இன்புற்றிருக்க வைப்பதற்குத் தொடங்கப்பட்ட பத்திரிகைதான் ஆனந்த விகடன். 1926-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதழின் அறிமுகக் கட்டுரையிலேயே, தனது நோக்கம் இதுதான் என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளான் விகடன். அந்த நோக்கம் ஒரு துளியும் சிதையாமல், 85 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையில் விகடன் பீடுநடை போட்டு வருவது, வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

‘‘அந்தக் காலத்துல காலங்கார்த்தால ரயில்வே ஸ்டேஷனுக்கே போய், ஆனந்த விகடன் பார்சல் எப்போதடா வரும் என்று காத்திருந்து, அங்கேயே காசு கொடுத்துக் கையோடு வாங்கி வந்து, ஒரு பக்கம்கூட விடாமல் படிச்சு முடிச்சப்புறம்தான் அடுத்த வேலையே ஓடும் எங்களுக்கு’’ என்று தங்கள் வாரிசுகளிடமும், பேரக் குழந்தைகளிடமும் பரவசம் ததும்பும் குரலில் சொல்லி மகிழ்கிற பெரியவர்கள், மதிப்புக்குரிய சீனியர் வாசகர்கள் அத்தனைத் தமிழ்க் குடும்பங்களிலும் உண்டு.

ஆனால், தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலையின் வளர்ச்சி, அச்சு நேர்த்தி, கம்ப்யூட்டர், இணைய தளம், டிஜிட்டல் புரட்சி என எல்லா வசதிகளோடும் மிகப் பிரமாண்டமாக விசுவரூபமெடுத்து நிற்கும் இன்றைய ஆனந்த விகடனை வாசிக்கும் இளைய தலைமுறையினரின் மனத்தில்... விகடனின் இத்தனை நாள் புத்துணர்வுத் தோற்றத்துக்கு அப்படி என்னதான் காரணம் என்கிற வியப்பு கலந்த சந்தேகம் தோன்றுவது இயல்புதான்.

‘பொக்கிஷம்’ என்கிற தலைப்பில், ஆனந்த விகடனின் கடந்த கால இதழ்களிலிருந்து சுவாரஸ்யமான பகுதிகளைத் தொகுக்கும் இந்தப் பணியை மேற்கொண்டபோது, மேற்கண்ட கேள்விக்கான முழு விடையும் எனக்குக் கிடைத்தது!

விகடன் இதழ்கள் ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க, பிரமிப்பு தாளவில்லை எனறுதான் சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை பிரமுகர்கள், எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள்... ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும், அந்தந்த கால கட்டத்தில் விகடனில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், இசை மேதைகள், நடன மாமணிகள், திரைக் கலைஞர்கள் என விகடன் தன் பட்டுக் கரங்களால் தட்டிக் கொடுக்காத பிரபலங்களே இல்லை!

தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல... அகில உலகத்தையும் தன் அகன்ற பார்வைக்குள் வளைத்து, அணைத்துக்கொண்டிருக்கிறான் விகடன்.

பொன்னும் மணியும் மின்னும் வைரக் கற்களுமாகக் கொட்டிக் கிடக்கும் அந்தப் புதையலிலிருந்து இன்றைய வாசகர்களுக்கு எதைக் கொடுப்பது, எதை விடுப்பது என்கிற மயக்கமும் திகைப்பும் என்னுள் உண்டாயிற்று. காரணம், எந்த ஒரு கட்டுரையை எடுத்துப் படித்தாலும், அது இன்றைக்கும் பொருந்துவதாக, அல்லது இப்போது படித்தாலும் அதன் சுவையில் குன்றிமணி அளவும் குன்றாததாக, பழைய நினைவுகளில் நம்மைத் திளைக்க வைத்துத் தாலாட்டுவதாகவே இருக்கிறது.

ஆனந்த விகடன் எனும் காலக் கண்ணாடி வழியே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் விதமாக, 1926 முதல் 2000-வது ஆண்டு வரையிலான விகடன் பதிவுகளை ஓர் ஆவணப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் எனும் நோக்கில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதுதான் ‘ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’. அதற்கு வாசகர்களாகிய உங்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு! அதன் தொடர்ச்சியாகத்தான் ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற இந்தப் புத்தகத்தை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இதோ, உங்களின் கைகளில் தவழ்கிறது ரசனையும் பாரம்பரியமும் மிக்க, குடும்பப் பாங்கான, காலங்களை வென்ற ஆனந்த விகடனின் பொக்கிஷப் பக்கங்கள்.

வருடாந்திர வரிசைப்படி இல்லாமல், அரசியல், கலை, இலக்கியம், சினிமா, நகைச்சுவை என இந்த 85 ஆண்டு காலப் பதிவுகளில் இருந்து ஒரு கதம்பமாகவே தொடுத்துள்ளேன். இவற்றை நீங்கள் வாசிக்கிறபோதே த்ரில்லான ரோலர்கோஸ்டரில் மேலும் கீழும் பயணிக்கும் பரவசத்தை உணர முடியும்.

ஆனந்த விகடனின் முதல் இதழிலிருந்து நேற்று வெளியான இதழ் வரைக்கும் ஒரே மூச்சில் படித்தவன் என்கிற கர்வம் இப்போது எனக்கு! இந்த பொக்கிஷத்தைப் படித்து முடிக்கும்போது அதுவேதான் உங்களுக்கும்!

படித்தபின் தவறாமல் உங்கள் கூர்தீட்டிய விமரிசனங்களை அனுப்பி வைத்தால், பொக்கிஷத்தின் அடுத்த தொகுப்பை இன்னும் மெருகேற்ற அது பேருதவியாக அமையும்.

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்

ஒரு கேள்வி: இந்தப் பதிவில் வைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அழகியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு!

.

27 comments:

கோகுல் said...

இப்போது தான் நான் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.மந்தாகினி தானே அவர்.

வந்தியத்தேவன் said...

puunkulali

வந்தியத்தேவன் said...

puunkulali

Anonymous said...

அழகியின் பெயர் = பூங்குழலி

யாரோ ஒருவன்

Anonymous said...

பூங்குழலி

Anonymous said...

pOONKUZHALI

மேவி... said...

அந்த கதாபாத்திரத்தின் பெயர் பூங்குழலி

Aba said...

அந்தப் பெண்: பூங்குழலி, பொன்னியின் செல்வனிலிருந்து..

நானும் ஒரு பொன்னியின் செல்வன் மற்றும் விகடன் குடும்ப ரசிகன். ஆனால் பொன்னியின் செல்வனை இதுவரை புத்தகமாகவோ தொடராகவோ படங்களுடன் படித்ததில்லை.. இணையத்திலேதான் படித்திருக்கிறேன்.

Ramachandranwrites said...

இது பூங்குழலி, அலை மகள், சேந்தன் அமுதன் காதலி, உத்தமசோழரின் மனைவி - சரியா ?

Prabakar said...

nandhini!

Prabakar said...

vanadhi

Prabakar said...

nandhini!

SPIDEY said...

poongodi sir

SPIDEY said...

yikes. poonkuzhali sir. by the way first vara thappana answerku prize ethum kidayatha sir?

Anonymous said...

She is Poonguzhali

A-kay said...

I didnt read your full post yet. But glanced through it, the picture and the last bit. The "odam" makes it unmistakably - poonguzhali, right?

Amma had a strict no-no about reading magazines and the first time she let me and anna touch a magazine (Kalki to be specific) was when Ponniyin Selvan was being published as a weekly in that. After that first read, I am not sure how many more times I have read that - lost count :) Same is true with Sivagamiyin Sabadam as well.

Surya said...

அந்த அழகியின் பெயர் "பூங்குழலி". பிற்காலத்தில் மதுராந்தகத் தேவருக்குப் பட்ட மகிஷியாகப் போகிறவர்.


சூர்யா

பால கணேஷ் said...

பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால் ‘பூங்குழலி’யை மறந்துவிட முடியுமா ரவி சார்? பொன்னியின் செல்வனைப் பற்றி எழுத உங்களுக்கே தகுதியில்லை என்று சொன்னீர்கள் என்றால்... என்னைப் போன்ற சிறியவர்கள் எந்த மூலை? ‘விகடன் பொக்கிஷம்’ நான் மிக ரசித்துப் படித்த விஷயம். இப்போது புத்தகமாகியிருப்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். புத்தகத் திருவிழாவில் வாங்கிப் பாதுகாத்துக்கறேன்! (உஙகளோட ஏடாகூடக் கதைகள்’ எனக்கு மிகப் பிடித்தது)

gnani said...

பூங்குழலி ! - ஞாநி

Jayakumar Chandrasekaran said...

poonguzhali

Jayakumar Chandrasekaran said...

poonguzhali

M.G.ரவிக்குமார்™..., said...

வானதி

கணேஷ் ராஜா said...

அந்த அழகியின் பெயர் பூங்குழலி. பொன்னியின் செல்வன் புதினத்தை ஏற்கெனவே இரண்டு முறை ஆழமாகப் படித்திருப்பதால் சட்டென்று என்னால் பதில் சொல்ல முடிந்தது. அவள்தான் பின்னால் உத்தம சோழன் என்கிற மதுராந்தகத் தேவருக்கு மனைவியாகி, பின்னர் இருவரும் அருள்மொழி வர்மனால் (ராஜராஜசோழன்) பட்டத்து ராஜா‍, ராணியாகப் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்படுவார்கள்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம் மறுபடி எடுத்துப் படிக்க ஆரம்பித்து மூழ்கி எழுந்து வந்து பார்த்தால்....நிறைய பேர் பதில் சொல்லிட்டாங்களே!

The Chief Mentor said...

டியர் சார், "மூன்றுமுடிச்சு" உங்களுக்கு பிடித்த பட லிஸ்டில் குறிப்பிட்டுள்ளீர்கள்.என்னுடைய ப்ளாக்கில் "நான்கு முடிச்சு" என்ற தலைப்பில் இந்த படத்தை வேறு கதையாக எழுதியிருக்கிறேன்.இயன்றால் வாசித்துப் பாருங்கள்-சூர்யகுமாரன்.
வலைப்பூவின் முகவரி:http://writersuryakumaran.blogspot.com

Nandhini said...

poonkulali sir...

Nandhini said...

poonkulali sir...