அதைக் கீழே தந்திருக்கிறேன்.
எம்மதமும் சம்மதம்
நாகப்பட்டினம் நகரின் எல்லையில் ஓர் அழகான உயர்ந்த வளைவு நம்மை வரவேற்கிறது. அவ்வளைவில் மசூதி, கோபுரம், மாதா கோயில் இவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்ற்ன. நம் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. ஆம், தஞ்சை மாவட்டத்தில் நிலவும் மத வேறுபாடின்மைக்குக் கட்டியம் கூறி நிற்கிறது அவ்வளைவு.
உயர்ந்து கம்பீரமாக நிற்கும் கோபுரக் கூண்டு. விசிறிப் பறக்கும் புறாக் கூட்டம். பளபளவென மின்னும் பளிங்குத் தரை. எங்கும் சுகந்தமாய் பரவி நிற்கும் சாம்பிராணிப் புகை. நாகூர் தர்காவின் அமைதியான சூழ்நிலை. பக்திப் பரவசத்துடன் நுழைகிறோம். ஓர் அறிவிப்பு நம் கண்ணில் படுகிறது: ‘ இந்தச் சலவைக்கல் மஹால் ஸ்ரீபழனியாண்டிப் பிள்ளை உபயம்’.
முஸ்லிம் கோயில் என்று சொல்லப்படும் தர்காவில், இந்து என்று பிரிக்கப்படும் ஒருவர் தர்ம கைங்கர்யம் செய்திருக்கிறார்! நாள்தோறும் தர்கா வாசலில் கூடும் மக்களைக் கண்டு நாம் அதிசயப்படுகிறோம். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம் அனைவருமே வந்து தொழுகிறார்கள்.
சாதாரணமாக இந்துக் கோயில்களில் பழக்கத்தில் இருக்கும் ‘முடி இறக்கும் பிரார்த்தனை’ நாகூர் தர்காவில் இருக்கிறது.
வேளாங்கண்ணி மாதாவும் சர்வ மதத்தினரின் வழிபாட்டுக்குரிய தெய்வமாக நின்று, அருள்மழை பொழிந்துகொண்டு இருக்கிறாள். அங்கு கூடும் இந்து, முஸ்லிம்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இந்துக் கோயில்களில் பக்தர்கள் நேர்ச்சை செய்வதுபோல் உலோக உருவங்கள் வேளாங்கண்ணி மாதாவுக்குக் காணிக்கையாகத் தரப்படுகின்றன.
தஞ்சை மாரியம்மன் கோயில் பிராகாரத்தில் போய் நிற்கிறோம். நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் நாம் சந்தித்த பக்தர்களில் அநேகர் முஸ்லிம், கிறிஸ்துவ சகோதரர்கள் இங்கு மாரியம்மனைத் தொழுது நிற்கிறார்கள். விசேஷ காலங்களில் எல்லா மதத்தினருமே தேவிக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். முடி இறக்குகிறார்கள்.
மதத் துவேஷம், மதத் துவேஷம் என்று எல்லோரும் பேசுகிறார்களே, அதைக் கோயில்களிலும் காண முடியவில்லை; அங்கு வரும் மக்கள் மனத்திலும் அது இல்லை.
பின்பு, எங்கேதான் இருக்கிறது அது?!
(19-4-1970 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.)
***
நீங்கள் கடவுளின் பரிசு. நீங்கள் எப்படி உருவெடுக்கப் போகிறீர்கள் என்பது கடவுளுக்கு நீங்கள் தரப்போகும் பரிசு!
நீங்கள் கடவுளின் பரிசு. நீங்கள் எப்படி உருவெடுக்கப் போகிறீர்கள் என்பது கடவுளுக்கு நீங்கள் தரப்போகும் பரிசு!
8 comments:
நான் தான் first. அதற்குள் இன்னொரு பதிவா. கிரேட்.
நாகூரை பற்றியும் வேளாங்கண்ணி யை பற்றியும் இன்னும் நிறைய எழுதலாம். இப்ப அவைகள் தஞ்சை மாவட்டத்தில் இல்லை. நாகை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டவுடன் அதனோடு இணைக்கப்பட்டுவிட்டது.
இருந்தாலும் 70-களில் உள்ளதை எடுத்து போட்டதே நிறைவாய் இருக்கு சார். வாழ்த்துக்கள்.
சார்! நல்ல பகிர்வு! இப்போதுதான் உங்களின் முந்தைய பதிவில், தஞ்சையின் மதநல்லிணக்கத்தை பின்னூட்டமிட்டேன். அதற்குள்ளாக அன்றைய தஞ்சை மாவட்டத்தை நினைவு படுத்தும் விதமாக மற்றுமொரு மதநல்லிணக்க இடுகை!
Co-incidence !!
கிட்டத்தட்ட, இந்த பதிவின் சில கருத்துகள் கொண்ட முந்தைய ஒரு இடுகையை பகிர்வதில் ஆனந்தம் அடைகிறேன்.
http://ponniyinselvan-katturai.blogspot.com/2009/06/blog-post.html
"முஸ்லிம் கோயில் என்று சொல்லப்படும் தர்காவில்" - Muslim mosque is different, தர்கா is different. In islam தர்கா is not allowed, because தர்கா concept is making another god(it also hindu culture).In islam making or equal to another God('Allha') is primary, first main sin.
"சாதாரணமாக இந்துக் கோயில்களில் பழக்கத்தில் இருக்கும் ‘முடி இறக்கும் பிரார்த்தனை’ நாகூர் தர்காவில் இருக்கிறது." - it is not muslim religious culture, purely hindu culture. only place in makkah only when haij time both(men and women) will cut or trim the hair.
"எம்மதமும் சம்மதம்!"- இது சரி இல்லை, but you can mean it 'உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு', Means all are brothers and sisters
எம்மதமும் சம்மதம் தான்
மதம் மனிதனின் ஒரு போர்வைதானே
நாகையை பற்றி நல்லா சொன்னீர்க்ள்
இந்த பதிவு நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. அதற்கு பிற்பட்ட காலத்தில், polarisation ஆகியிருக்கிறது என நினைக்கிறேன். அப்போது லஷ்கர்-ஈ-தொய்பா, ஜைஷ்-ஈ-முஹம்மத், ஒசாமா-பின்-லேடன் இல்லை; ஜிஹாத் பற்றிய பதிவுகள், வெடி குண்டுகள், 9/11, 26/11, போன்றவை மாற்றங்கள் ஏற்படுத்தியிருப்பதை நாம் காணாமல் தவிர்க்க முடியாது.
மேலும், majeedhukalil , சிவராத்திரி போன்ற பஜனைகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடப்பதில்லை; ஆனால், kaafir குறித்து வெறுப்பு கருத்துகள் பரப்படுகின்றன என்று நடுநிலை இந்துக்களும் நம்புகின்றனர். அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதில்லை; அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என சராசரி இந்து நம்புகிறான். இது பாரதீய ஜனதா கட்சிக்கு நல்ல ஆயுதம்.
இந்தியா தன மதச்சார்பற்ற நிலைப்பாட்டின், வழிமுறைகளை நடுநிலையுடன் சீர் தூக்கி பார்க்கவேண்டும்.
நாகை,தஞ்சை, நாகூர் மத ஒற்றுமைக்கு அருமையான எடுத்துக்காட்டு......
பின்பு, எங்கேதான் இருக்கிறது அது?! வேறெங்கிருந்து?துவெஷம்.. ஓட்டு பொறுக்கும் அரசியலாள்ர்களிடம் தான் இருக்கிறது..அதை தாண்டி தற்பொழுது,பொழுதெ போகாத பாசங்கு சமுக நீதி காவலர்களிடமும் ஆபத்தாக வளர்ந்து வருகிறது...
/பின்பு, எங்கேதான் இருக்கிறது அது?!/
விடை தெரியாத கேள்வி இது!
அப்துல்காதர்! மிக்க நன்றி!
நன்றி பொன்னியின்செல்வன்!
மேக்! நன்றி!
ஜில் தண்ணி! ரொம்ப நன்றி! இந்தக் கோடை அனல் வெயிலுக்கு உங்கள் பெயரே குளிர்ச்சியாக இருக்கிறது!
விஞ்ஞானி! தங்கள் பார்வையில் ஒரு கருத்தைப் பதிந்துள்ளீர்கள்! நன்றி!
நன்றி பத்மநாபன்!
நன்றி அன்புடன் அருணா!
Post a Comment