பொக்கிஷம் பரிசு யாருக்கு?

‘பொக்கிஷம்’ புத்தகப் பரிசுப் போட்டிக்கு வந்த விடைகளை இன்று பதிவிட்டுவிட்டேன். நாளை வரை விடைகளை அனுப்பலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனாலும், இனிமேல் விடைகள் வர வாய்ப்பில்லை என்பதாலும், அப்படியே வந்தாலும் முதலில் அனுப்பியவருக்கே பரிசு என்பதால் பரிசுக்குரியவர் மாறப்போவதில்லை என்பதாலும் விடைகளை வெளியிடுவதில் தவறில்லை என வெளியிட்டுவிட்டேன்.

ஓர் எழுத்தாளரின் பேச்சைக் கேட்பதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே காத்திருந்தேன். என்னை உள்ளே விட வாட்ச்மேன் மறுத்துவிட்டார். யார் அந்த எழுத்தாளர்? என்னுடைய எந்த வலைப்பூவில், எந்த ஆண்டு, எந்த மாதம், என்ன தேதியில் எழுதிய பதிவில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்? அந்தப் பதிவின் தலைப்பு என்ன?

இதுதான் பொக்கிஷம் பரிசுக்கான கேள்வி. இதற்கான சரியான விடை: அந்த எழுத்தாளர் திரு.அசோகமித்திரன். எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில், 2009-ம் ஆண்டு, ஜூன் மாதம் 26-ம் தேதி எழுதிய பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ளேன். அந்தப் பதிவின் தலைப்பு: (அசோக)மித்திரனின் மித்திரன் நான்!

இதற்கான சரியான விடையை முதலில் பின்னூட்டம் இட்டவர் திரு.சிவானந்தம்.

அவர் தனது இந்திய முகவரியினை உடனே என் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால், ‘பொக்கிஷம்’ புத்தகத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைப்பேன்.

என் வலைப்பூக்கள் பற்றி ஆக்கபூர்வமாக விமர்சனம் எழுதி அனுப்பும்படிஇன்னொரு போட்டியும் வைத்திருந்தேன். இதுவரை மொத்தம் 7 கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளன. நாளை வரை கடைசி தேதி கொடுத்திருப்பதால், நாளை இரவு இது குறித்து மீண்டும் எழுதுகிறேன்.

நிற்க.

‘என் டயரி’ வலைப்பூவில், ‘பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்’ என்னும் பதிவில் ஒரு படம் வெளியிட்டு, அந்த அழகி யார் என்று கேட்டிருந்தேன். சரியான விடை அனுப்புகிறவருக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு எனச் சொல்லியிருந்தேன்.

சரியான விடை: பூங்குழலி.

இதை முதலில் பின்னூட்டமாக அனுப்பியவர் ‘யாழ் மைந்தன்’. திரு.யாழ் மைந்தன் தனது முகவரியை இன்னும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என்பதால் பரிசுப் புத்தகம் அனுப்பி வைக்க இயலவில்லை. இந்தத் தகவலைஎனது ‘உங்கள் ரசிகன்’ பதிவில் கொடுத்திருந்தேன்.

இருப்பினும், இன்று வரையில் யாழ் மைந்தனின் முகவரி எனக்குக் கிடைக்கவில்லை. அவரும் என்னை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருக்கால் அவர் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூ பதிவைப் பார்த்திருக்க மாட்டாரோ என்ற ஐயத்தில் இதே பதிவை ‘என் டயரி’யிலும் மீண்டும் பதிந்துள்ளேன்.

ஜனவரி 15 தேதிக்குள்ளாக திரு. யாழ் மைந்தன் தனது இந்திய முகவரியை எனது இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பி வைத்தால், உடனே விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

ஜனவரி 15 தேதி வரையிலும் திரு.யாழ் மைந்தனின் முகவரி எனக்குக் கிடைக்கவில்லையெனில், அந்தக் குட்டிப் புத்தகப் பரிசு யாரோ ஒருவனுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.

அடடா..! மரியாதைக் குறைவாகச் சொல்லலீங்க. ‘யாரோ ஒருவன்’ என்னும் பெயரில் வலைப்பூ எழுதி வருபவர்தான் யாழ் மைந்தனுக்கு அடுத்தபடியாக சரியான விடையைப் பின்னூட்டம் இட்டவர்.

என்ன ஆச்சரியம் பாருங்கள்... முதலில் சரியான விடையை எழுதி அனுப்பிய இருவருமே ‘யா’ எழுத்தில் தொடங்குகிறது!
.

3 comments:

ஜெய்லானி said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :-)

சிவானந்தம் said...

வணக்கம் சார்,

தற்போது தான் நான் பரிசு பெற்றதைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அடுத்த வாரம் இதே நேரம் அண்ணாசாலை வரை அலுவல் காரணமாக வேண்டியுள்ளது. அப்போது தங்களிடமிருந்து நேராகவே பரிசைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி,
சிவானந்தம்.

ungalrasigan.blogspot.com said...

:-) மகிழ்ச்சி! அவசியம் வாருங்கள். பொக்கிஷம் உங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது!