தேர்ந்தெடுங்கள் ஐவரை! - ஒரு போட்டி

கைச்சுவை எழுத்துலகின் ஜாம்பவான் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களோடு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகப் பழகி வரும் பாக்கியம் பெற்றவன் நான். பள்ளிக்கூடத்தில் நான் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அவரது எழுத்துத் திறமை பற்றியும், அவருடைய ஜீவிய கதாபாத்திரங்களான அப்புசாமி-சீதாப்பாட்டி பற்றியும் என் தந்தையார் மூலமாக அறிந்திருக்கிறேன். என் அப்பா, பாக்கியம் ராமசாமியின் பரம ரசிகர்.

‘அப்புசாமி டாட் காம்’ என்று ஓர் இணைய தளத்தைத் தொடங்கி, அதில் அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் உள்பட பல்வேறு சுவையான கட்டுரைகளையும், செய்திகளையும், தகவல்களையும் பதிவிட்டு வருகிறார் பாக்கியம் ராமசாமி.

தவிர, அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட் என்ற ஒன்றையும் ஏற்படுத்தி, வருடந்தோறும் மே மாதத்தில், நகைச்சுவையில் சாதனை படைத்தவராகத் தாம் கருதும் பிரபலம் ஒருவருக்குப் பாராட்டுப் பத்திரமும், விருதும் அளித்துக் கௌரவித்து வருகிறார். ஓவியர் கோபுலு, எழுத்தாளர் கோமதி ஸ்வாமிநாதன், காத்தாடி ராமமூர்த்தி என கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இந்த டிரஸ்ட் மூலம் விருது பெற்றவர்கள் பலர்.

இந்த வருடமும் அதே போல், வரும் மே மாதத்தில் நகைச்சுவைப் பிரபலம் ஒருவருக்குப் பாராட்டுப் பத்திரமும், விருதும் அளித்துக் கௌரவிக்க இருக்கிறார் பாக்கியம் ராமசாமி. (இன்னும் அடுத்து வரும் ஆண்டுகளிலும், பல நகைச்சுவை மன்னர்களுக்கும் சக்கரவர்த்திகளுக்கும் இவர் விருது அளித்துக் கௌரவிக்கலாம். ஆனால், ஒரே ஒரு நகைச்சுவைத் திலகத்துக்கு மட்டும் இவரால் விருது கொடுத்துக் கௌரவிக்க முடியாது. அந்த ‘பாக்கியம்’ இவருக்கு இல்லை; ‘அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட்’ மூலம் விருது பெறும் ‘பாக்கியம்’ அந்த நகைச்சுவைத் திலகத்துக்கும் இல்லை!)

இதற்கான விழா, கடந்த வருடங்களில் நடந்தது போலவே, அநேகமாக இந்த முறையும் நாரத சபா மினி ஹாலில் நடக்கக்கூடும். பிரபலம் ஒருவருக்கு விருது கொடுப்பதோடு கூடவே, இந்த முறை நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர்கள் ஐந்து பேருக்குத் தலா ரூ.250/- வழங்குவதென்றும் முடிவு செய்துள்ளார் பாக்கியம் ராமசாமி.

இதற்காக அவர் என்னைத் தொடர்பு கொண்டு, சிறந்த ஜோக் எழுத்தாளர்கள் ஐந்து பேரை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டபோதுதான், இந்தப் புத்தகப் போட்டிக்கான யோசனை எனக்கு உதயமாயிற்று.

யாரோ ஐந்து பேரை நானே சிறந்த ஜோக் எழுத்தாளர்கள் என்று தீர்மானித்து, அவர்கள் பெயரைப் பரிந்துரைப்பதைவிட, ஒரு ஜோக் போட்டி நடத்தி, சிறந்த ஜோக்குகளைத் தேர்ந்தெடுக்கலாமே என்று முதலில் யோசனை செய்தோம். சில காரணங்களால் அது நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பின்பு, வெவ்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இந்தப் புத்தகப் போட்டி யோசனையைச் சொன்னேன். அவருக்கும் அது பிடித்திருந்தது.

அதன்படி, நேற்றைய பதிவில் 30 ஜோக்குகளைப் பிரசுரித்துள்ளேன். பழைய ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான ஆயிரக்கணக்கான ஜோக்குகளைப் படித்துப் பரிசீலித்து, மிக மிகச் சிறந்த ஜோக்குகளாக நான் கருதிய முப்பதை மட்டும் தேர்ந்தெடுத்துப் போட்டிருந்தேன்.

இனி, போட்டி!

அந்த முப்பது ஜோக்குகளையும் படித்திருப்பீர்கள். அவற்றில் உங்களுக்கு மிக மிகப் பிடித்த முதல் ஐந்து ஜோக்குகள் எவை?

உங்கள் நகைச்சுவை ரசனைக்கேற்ப ஐந்தே ஐந்து ஜோக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதிய ஐந்து பேரின் பெயர்களை மட்டும் எனக்குப் பின்னூட்டமாக அனுப்பிட வேண்டுகிறேன்.

அவசரமில்லை; இந்த மாத இறுதி வரை உங்கள் தீர்ப்புகளை எனக்கு அனுப்பிக்கொண்டு இருக்கலாம். அதாவது, ஏப்ரல் 30 தேதி முடிய வரும் உங்கள் பின்னூட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மே முதல் வாரத்தில் உங்கள் பின்னூட்டங்களைப் பரிசீலித்து, எந்தெந்த ஜோக் எழுத்தாளருடைய பெயர்களை அதிக அளவு நீங்கள் பரிந்துரைத்திருக்கிறீர்கள் என்று பார்த்து, அதன் அடிப்படையில், உங்களிடம் அதிக வோட் வாங்கியிருக்கும் முதல் ஐந்து ஜோக் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.250-ஐ ‘அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட்’டின் அன்புப் பரிசாக அனுப்பி வைப்பார் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி. பரிசு பெறும் அந்த ஜோக் எழுத்தாளர்கள் தங்களால் இயன்றால், சென்னையில் நடைபெறும் அந்த நகைச்சுவை விழாவில் கலந்துகொண்டு, நேரிலேயே அந்தப் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், அவர்களின் முகவரிக்கு அந்தத் தொகை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் பாக்கியம் ராமசாமி.

சரி, தங்கள் பின்னூட்டங்களின் மூலம் பரிசுக்குரிய ஐந்து ஜோக் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ‘என் டயரி’ வாசகர்களுக்கு என்ன பரிசு?

சென்ற பதிவிலேயே சொன்னதுபோல், ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’ என்கிற புத்தகம்தான்!

இங்கே, இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சில விவரங்கள்:

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு மளமளவென்று முழுவதும் விற்றுத் தீர்ந்து, இரண்டாவது பதிப்பும் வெளியாகி சுறுசுறுப்பான விற்பனையில் இருக்கிறது.

ஐ.ஐ.டி. படித்து சொந்தத் தொழில் தொடங்கி, வெற்றி பெற்றவர்களைப் பற்றிய தகவல்களும் பேட்டிக் கட்டுரைகளுமாக உள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்குத் தாங்களும் சொந்தமாகத் தொழில் தொடங்கி, சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற உத்வேகம் வருவது நிச்சயம். இதை ஆங்கிலத்தில் எழுதிய ‘ராஷ்மி பன்சால்’ அதே வேகத்தோடு 'கனெக்ட் தி டாட்ஸ்’ என்னும் தலைப்பில் மற்றொரு புத்தகத்தையும் சுறுசுறுப்பாக எழுதி, வெளியிட்டுவிட்டார். ஐ.ஐ.டி. படிக்காமலே, சொந்தத் திறமையை மட்டுமே முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்களைப் பற்றிய புத்தகம் இது. (இதன் பின் அட்டையில் ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ மொழியாக்கப் புத்தக அட்டைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன - விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்ட ‘முயற்சி திருவினையாக்கும்’ உள்பட!)

‘ஸ்டே ஹங்ரி...’ புத்தகம் தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்கிற மகிழ்ச்சியோடு, ராஷ்மி பன்சாலின் ‘கனெக்ட் தி டாட்ஸ்’ புத்தகத்தையும் தமிழில் வெளியிட விகடன் பிரசுரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. அநேகமாக அதையும் மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டலாம் என்று நம்புகிறேன்.

சரி, போட்டி விஷயத்துக்கு வருகிறேன். பின்னூட்டங்களின் மூலம் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் ஜோக் எழுத்தாளர்கள் ஐவர் பெயரையும் யார் மிகச் சரியாகத் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளாரோ, அவருக்கு ‘முயற்சி திருவினையாக்கும்’ புத்தகத்தை என் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

இந்தப் போட்டிக்கான சில விளக்கங்களும், விதிமுறைகளும்:

1. ஒருவர் ஒரே ஒரு பின்னூட்டம் மூலமாகத்தான் தனது தீர்ப்பைத் தெரியப்படுத்த வேண்டும். வெவ்வேறு பர்முடேஷன் காம்பினேஷனில் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் மூலம் வோட் அளித்தால், அவை அனைத்துமே நிராகரிக்கப்படும்.

2. உங்கள் பின்னூட்டத்தில் ஐந்தே ஐந்து ஜோக் எழுத்தாளர்கள் பெயரை மட்டுமே நீங்கள் குறிப்பிட வேண்டும். எண்ணிக்கையில் ஒன்று குறைந்தாலோ, ஒன்று அதிகமானாலோ, அது போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஐந்து ஜோக் எழுத்தாளர்களின் பெயர்களையும், முந்தைய ஜோக் பதிவில் குறிப்பிட்டுள்ளது போலவே முழுதாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

4. நீங்கள் வலைப்பதிவராக இருந்தால், பின்னூட்டத்தில் அதன் யு.ஆர்.எல்-ஐக் கொடுங்கள்; அல்லது, உங்கள் இ-மெயில் முகவரியைக் கொடுங்கள். மற்றபடி, எக்காரணம் கொண்டும் உங்கள் அஞ்சலக முகவரியைக் குறிப்பிட வேண்டாம்.

5. நீங்கள் வலைப்பதிவராகவோ, இ-மெயில் முகவரி இல்லாதவராகவோ இருந்தாலும், பின்னூட்டத்தின் மூலம் ஐந்து ஜோக் எழுத்தாளர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், உங்கள் முழுப் பெயரோடு, உங்கள் ஊர்ப் பெயரையும் குறிப்பிட வேண்டியது அவசியம். பெயர், ஊர் இல்லாத அனானிமஸ் பின்னூட்டங்கள் ஏற்கப்படமாட்டாது.

6. இம்மாத இறுதிக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 30 தேதிக்குப் பிறகு வரும் இதற்கான பின்னூட்டங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

7. நான் அறிவித்துள்ள இந்தப் போட்டிக்கும் ஆனந்த விகடன் நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதே போல், இந்தப் போட்டிக்கும் ‘அப்புசாமி டாட் காம்’ மற்றும் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை டிரஸ்ட்’ இவற்றுக்கும்கூட எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என் சந்தோஷத்துக்காக, எந்த வித லாப நோக்கமும் இன்றி, நான் என் வலைப்பூ நேயர்களுக்காக அறிவிக்கிற போட்டியாகும்!

8. உங்கள் வோட்டுக்கள் மூலம் முதல் ஐந்து ஜோக் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து ‘அப்புசாமி டிரஸ்ட்’டுக்கு அளிப்பதோடு ‘என் டயரி’யின் பணி முடிகிறது. மற்றபடி, அந்த ஐந்து ஜோக் எழுத்தாளர்களுக்கும் ‘என் டயரி’ வலைப்பூவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

9. உங்கள் வோட்டுக்களின் அடிப்படையில்தான், அதிக வாக்குகள் பெற்ற ஜோக் எழுத்தாளர்களின் ‘டாப் 5’ பட்டியல் உருவாகும். ஆனால், மிகச் சரியாக அந்த ஐந்து பேரை தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளவருக்கு மட்டுமே ‘முயற்சி திருவினையாக்கும்’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

10. ஒருவருக்கு மேல் ‘டாப் 5’ பட்டியலைச் சரியாக எழுதியிருந்தாலும், அனைவருக்கும் மேற்படி புத்தகப் பரிசு உண்டு.

11. ஒருவருமே சரியாக அந்த ஐந்து ஜோக் எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கவில்லை என்றால், அதிக எண்ணிக்கையில் சரியாகக் குறிப்பிட்டுள்ளவருக்குப் புத்தகப் பரிசு உண்டு. ஆனால், ஒரு நிபந்தனை. இப்படித் தேர்ந்தெடுக்கப்படும்போது, முதலில் பின்னூட்டம் இட்டவருக்கு மட்டுமே புத்தகப் பரிசு கிடைக்கும். உதாரணமாக, ஜோக் எழுத்தாளர்கள் நால்வரின் பெயர்களைச் சரியாக எழுதி, ஒரு பெயரை மட்டும் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பின்னூட்டங்கள் பத்துப் பன்னிரண்டு வருமானால், அவற்றில் முதலாவதாக வந்த பின்னூட்டத்துக்கே புத்தகப் பரிசு.

12. மே முதல் வாரத்தில், அந்த முதல் ஐந்து நகைச்சுவையாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் எழுத்தாளர் திரு. பாக்கியம் ராமசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னரே உங்களின் பின்னூட்டங்கள் வலைப்பூவில் பதியப்படும்.

13. இதற்கான பின்னூட்டங்கள் பதியப்பட்ட பின்னர், புத்தகப் பரிசு பெறும் வலைப்பூ நேயர் பெயரை அறிவிக்கிறேன். பிறகு அவர் தனது முழு அஞ்சல் முகவரியை என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பி வைத்தால், உடனடியாக ‘முயற்சி திருவினையாக்கும்’ புத்தகத்தை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். பரிசு பெற்ற நேயர் பெயரை அறிவித்த 15 நாட்களுக்குள் முகவரி கிடைத்தால் மட்டுமே புத்தகம் அனுப்பி வைக்க இயலும்.

14. வெளிநாட்டிலிருந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் நேயராக இருந்தால், தயவுசெய்து உங்களின் இந்திய முகவரியைத் தர வேண்டுகிறேன். இந்திய முகவரிக்கு மட்டுமே புத்தகப் பரிசு அனுப்பி வைக்கப்படும்.

15. சில சமயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பதைப் பிற்பாடு அவர்கள் அனுப்பிய இரண்டாவது பின்னூட்டம் மூலமும் இ-மெயில் மூலமும் அறிய நேர்ந்திருக்கிறது. ஆகவே, இப்படியான எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. எனவே, இந்த விஷயத்தில் என் மனச்சாட்சியின் தீர்ப்பே இறுதியானது.

முயற்சி திருவினையாக்கும்!

ALL THE BEST!

***

முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும். முயலாமை வெல்லாது!

25 comments:

பத்மா said...

ready

அன்புடன் அருணா said...

1.வெ.சீதாராமன்
2.எம்.அசோக்ராஜா
3.தமிழ்
4.ஜி.லட்சுமிபதி
5.சாதிக்
இதுதான் என் வரிசை!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/

ரவிஷா said...

என் தெரிவு:

1. ஓரியூர் கே.சேகர்
2. சித்தார்த்
3. சி.பி.செந்தில்குமார்
4. பா.ஜெயக்குமார்
5. ஜெ.மாணிக்கவாசகம்

நன்றி

ரவி said...

எதை எடுக்க எதை விட

அருமை அருமை

v sarathidecchu
oriyur k sekar
c p senthilkumar
m ashokraja
namakkal balu

இது தான் என் தீர்வு

pudugaithendral said...

கண்டிப்பா செய்யலாமே.

பாலாஜி சங்கர் said...

எஸ்.ஏ.கருணாநிதி
க.கலைவாணன்
தமிழ்
கே.ஆனந்தன்
அதிரை புகாரி

Balaji

hibalaji1984@gmail.com
http://balajipakkam.blogsopt.com

வெங்கட் நாகராஜ் said...

1. வி. சாரதிடேச்சு
2. வெ. சீதாராமன்
3. தஞ்சை தாமு
4. ஜெ. மாணிக்கவாசகம்
5. கு. வைரச்சந்திரன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

V.RAJASEKARAN, Villupuram said...
This comment has been removed by a blog administrator.
selventhiran said...

ம்...ம்... விதம் விதமா போட்டி நடத்தி அசத்தறீங்க...

பனித்துளி சங்கர் said...

அந்த ஐவரை இப்பொழுதே தேடத் தொடங்கிவிட்டேன் .

பல தகவல்களை தந்து இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

Kalyani said...

Here are my pics:

1) V. Vishnukumar
2) C.P. Senthilkumar
3) Leelaaji
4) Paa. Jayakumar
5) S. Muhammad Yosuf

Thanks for the jokes and the contest.

Kalyani (from Kumbakonam)

sekark10 said...

my choice for 5 joke writers

1) எஸ்.முகம்மது யூசுப்
2) அ.அப்துல்காதர்
3) ஓரியூர் கே.சேகர்
4) சித்தார்த்
5) தஞ்சை அனார்கலி

Nathanjagk said...

பாக்கியம் ராமசாமி-யின் அப்புச்சாமி.காம் இப்பத்தான் வாசித்துவிட்டு வர்றேன். இங்கே அவர் நடத்துற ஜோக் போட்டியா?
நாங்கெளெல்லாம் நடுவர்களா? சூப்பர்ப்.
இதுதான் wildcard round!!!

Nathanjagk said...

சாதிக்
லீலாஜி
எம்.அசோக்ராஜா
எஸ்.ஏ.கருணாநிதி
கே.ஆனந்தன்

Guru said...

1. வி.சாரதிடேச்சு
2.அறந்தாங்கி என்.ராஜேந்திரன்
3.வீ.விஷ்ணுகுமார்
4.ஓரியூர் கே.சேகர்
5.தஞ்சை தாமு

கிருபாநந்தினி said...

சார், மன்னிக்கணும்! குழப்பத்துல நான் ஜோக் எழுத்தாளர்கள் டாப்-5 பட்டியல் வரிசையை முந்தின பதிவுல போட்டுட்டேன். தயவுசெய்து அதையும் கணக்குல சேர்த்துக்குங்க, ப்ளீஸ்!

S.V.RAMKUMAR said...

EXLNT JOB U HAVE DONE! CONGRATS!! HERE IS MY CHOICE:
1. THANJAI DHAMU
2. S.P.SENTHILKUMAR
3. LEELAAJI
4. SAADHIQ
5. S.MOHAMMED YUSUF

S.V.RAMKUMAR, TRICHY-2.

Nathanjagk said...

ப்ச்.. நான் அனுப்பிய பின்னூட்டம் கூட மிஸ் ​போல!
திரும்ப அனுப்ப​றேன். தகவலுக்கு நன்றி!!

Baranee said...

My List for the competition,
தஞ்சை தாமு,
ஓரியூர் கே.சேகர்,
சி.பி.செந்தில்குமார்,
கு.வைரச்சந்திரன்,
சாதிக்.

One of your regular readers from Bangalore....
Baranee

Baranee said...

Forgot to mention my email id in my previous comment,
kbaraneetharan@gmail.com.

Regards,
Baranee, Bangalore

யுவகிருஷ்ணா said...

1. ஓரியூர் கே.சேகர்

2. எம். அசோக்ராஜா

3. தமிழ்

4. சாதிக்

5. பர்வதவர்த்தினி

Anonymous said...

நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தையும் ரசித்தேன். எதை எடுப்பது, எதை விடுப்பது என்று புரியவில்லை. ஐந்து பேரை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தபடியால், கீழ்க்கண்ட ஐவரையும் தெரிவு செய்கிறேன்.
1. தஞ்சை தாமு, 2. வி.சாரதிடேச்சு, 3. ஓரியூர் சேகர், 4. சி.பி.செந்தில்குமார், 5. லீலாஜி.
வணக்கம்.

புலவர் இரா.முத்தையா,
கடலூர்.

அமைதி அப்பா said...

1.ஓரியூர் கே.சேகர்
2.வி.சாரதிடேச்சு
3.சாதிக்
4.வெ.சீதாராமன்
5.ஜி.லட்சுமிபதி

ஆசீர் said...

ஓரியூர் கே.சேகர்
எம்.அசோக்ராஜா
கு.வைரச்சந்திரன்
தஞ்சை அனார்கலி
கே.ஆனந்தன்

பத்மநாபன் said...

சென்ற முறை ...பாக்கியம் ராமசாமியின் புத்தகம் பரிசாக கிடைத்தது ... இந்த முறை ''முயற்சி திருவினையாக்கும் '' முயற்சியில்
தேர்வுகள் கிழே..
1.வே. சீத்தாராமன் .
2.வி . சாரதி டேச்சு
3.எஸ்.ஏ . கருணாநிதி .
4.தஞ்சை தாமு .
5.தமிழ் .

உங்கள் கடும்பணியிலும், பொறுமையாக இம்மாதிரியாக போட்டிகள் நடத்தி பரிசுகள் தருவதற்கு வாழ்த்துக்கள் ...நன்றி ..