படிங்க; சிரிங்க; பரிசை வெல்லுங்க!

ங்கே மொத்தம் 30 ஜோக்குகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இவையெல்லாம் கடந்த காலங்களில் ஆனந்தவிகடனில் வெளியான ஜோக்குகள். படியுங்கள்; ரசியுங்கள்.

ரூ.175 விலையுள்ள புத்தகம் ஒன்றைப் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களுக்குக் காத்திருக்கிறது.

முதலில் ஜோக்ஸ்...
“புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் மந்திரியாரே! நானும் அப்படித்தான்!”
“அதற்காகத் தங்களின் 70-வது வயது வரை இப்படிப் பதுங்கியே இருப்பது வீரத்துக்கு அழகில்லை, மன்னா!”
- எஸ்.ஏ.கருணாநிதி

“அந்த ரெண்டு பாடகர்களும் சகோதரர்களாம்..!”
“சரி, அதுக்காக ஒருத்தருக்கு ‘சங்கீத கலாநிதி’, இன்னொருத்தருக்கு ‘சங்கீத தயாநிதி’ன்னு பட்டம் கொடுக்கணுமா, என்ன!”
தஞ்சை தாமு

“கொடுத்த டாக்டர் பட்டத்தை தலைவர் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டார்?”
“அவர் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கிறதாலே, அவருக்கு வக்கீல் பட்டம்தான் வேணுமாம்!”
- வி.சாரதிடேச்சு

“சோடியம்குளோரைடு தின்னவன் ஹெச்2 ஓ குடிச்சே ஆகணும்!”
“என்ன மாஸ்டர் சொல்றீங்க?”
“டான்ஸ் ஆடும்போது உங்க ரெண்டு பேருக்கும் இடையில கெமிஸ்ட்ரியே இல்லைன்னு சொல்றேன்!”
- க.கலைவாணன்

“நம்ம தலைவர் என்ன இவ்வளவு அசட்டுத்தனமா இருக்கார்?”
“என்ன விஷயம்?”
“எனக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; அட்லீஸ்ட் தமிழ்நாடு ரத்னா விருதாவது கொடுக்கக்கூடாதா?’ன்னு கேக்கறாரே!”
- வைகை ஆறுமுகம்

“ஆனாலும் என் லவ்வருக்கு பொசஸிவ்னெஸ் அதிகம்!”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“பின்னே... அவரை மட்டும்தான் நான் லவ் பண்ணணும்கிறாரே!”
- ஜெ.மாணிக்கவாசகம்

“யோவ், என்னய்யா இது... என்னை வரவேற்கும் போஸ்டர்ல ‘தன்மான டைனோசரே வருக!’ன்னு போட்டிருக்கீங்க?”
“தன்மானச் சிங்கமே வருக-ன்னு போட்டுப் போட்டு போரடிச்சுருச்சு தலைவா!”
- வீ.விஷ்ணுகுமார்

“உங்களுக்குதான் ஓட்டு கிடையாதுன்னு சொன்னோமே... அப்புறமும் எதுக்கு நின்னுக்கிட்டே இருக்கீங்க?”
“கை நீட்டிப் பணம் வாங்கிட்டேன். அதுக்கு ஒரு கள்ள ஓட்டாவது போட்டுட்டுப் போயிடுறேனே..!”
- ஓரியூர் கே.சேகர்

“டான்ஸ் போட்டிக்கு வந்தவர் எதுவுமே ஆடாம ‘நானும் நயன்தாராவை லவ் பண்றேன்’னு சொல்றாரே..?”
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?-ங்கிற போட்டியைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு!”
- சி.பி.செந்தில்குமார்

“இன்னொரு பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தீங்கன்னா...”
“என்ன... பேஷண்ட்டைக் காப்பாத்தியிருக்க முடியாதா?”
“இல்ல... காப்பாத்தியிருக்கலாம்!”
“என்ன சொல்றீங்க?”
“டாக்டர் வீட்டுக்குக் கிளம்பிப் போயிருப்பார்னு சொல்றேன்!”
- அ.அப்துல்காதர்

“உடம்பு பலவீனமா இருக்குதுன்னு வந்தீங்களே; டானிக் எழுதித் தந்தேனே! இப்போ எப்படி இருக்கு?”
“டானிக் பாட்டிலோட மூடியைத் திறக்கவே முடியலை டாக்டர்!”
- எம்.அசோக்ராஜா

“நம்ம ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனாலும் ரொம்ப மோசம்!”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“பின்னே... என் மனைவியைக் காணோம்னு ஒரு சம்பிரதாயத்துக்குப் புகார் கொடுத்தேன். அடுத்த நாளே கண்டுபிடிச்சு வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டாரே!”
- வி.சகிதாமுருகன்

“சல்மான்கானும் ஸ்ரீதேவியும் சேர்ந்து ஒரு படத்துல நடிச்சா, அதுக்கு என்ன பேர் வைப்பாங்க?”
“மானாட, மயிலாட!”
- நாமக்கல் பாலு

“நீ செய்த இந்தக் கொடூரமான கொலைக்கு என்ன தண்டனை தெரியுமா?”
“என்னைப் போய்க் கேக்கறீங்களே ஐயா! நான் உங்க அளவுக்கெல்லாம் படிக்கலீங்களே!”
- லீலாஜி

“ஃபீஸ்தான் கொடுத்துட்டேனே டாக்டர், அப்புறம் என்ன?”
“தெர்மாமீட்டருக்கு மேல ஏதாவது போட்டுக் கொடுப்பா!”
- ஜி.லட்சுமிபதி

“நம்ம தலைவர் ‘2041-லும் நாங்கதான் ஆட்சி அமைப்போம்’னு சொல்றாரே, ஏன்?”
“தலைவருக்குப் பேரன் பொறந்திருக்கானாம்!”
- கு.வைரச்சந்திரன்

“ஹீரோ ஆடு மேய்க்கிறார்...”
“அட, ஏதாவது வெயிட்டான சப்ஜெக்டா சொல்லுப்பா..!”
“சரி, ஹீரோ யானை மேய்க்கிறார். ஓகேவா சார்?”
- ப.திருமுருகன்

“பாட்டைக் காப்பி அடிக்கிறதுக்கு ரீ-மிக்ஸுக்கும் என்ன வித்தியாசம்?”
“டியூனை மட்டும் திருடினா அது காப்பி! முழுப் பாட்டையும் திருடினா அது ரீ-மிக்ஸ்!”
- சித்தார்த்

“நான் சீக்கிரமா போகணும். டாக்டரைப் பார்க்க முடியுமா?”
“டாக்டரைப் பார்க்கிறதுக்கு முந்தியே சீக்கிரமா போகணும்னு அவசரப்பட்டா எப்படி சார்?”
- வெ.சீதாராமன்

“மன்னா! போருக்குக் கிளம்பலாமா?”
“ம... ம... மந்திரியாரே...! போரா... என்ன சொல்கிறீர்?”
“ஐயையோ! அழாதீர்கள் மன்னா! இன்றைக்கு ஏப்ரல் 1. அதான், சும்மா ஏமாற்றித் தமாஷ் பண்ணினேன்!”
- சிவம்

“உங்க ஒய்ஃப் எப்படி இருக்காங்க?”
“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க!”
“அடடா! அப்ப உங்க ஒய்ஃபும் கல்யாணம் ஆகாம இன்னும் தனியாதான் இருக்காங்கன்னு சொல்லுங்க!”
- தமிழ்

“தாத்தா! என் டீச்சர் வராங்க. சட்டுனு ஓடிப்போய் ஒளிஞ்சுக்க. சீக்கிரம்!”
“என்னம்மா குழந்தே! உன்னோட டீச்சர் வரதுக்கு, நான் ஏம்மா ஒளியணும்!”
“இல்ல தாத்தா! அவங்க கிட்டே நீங்க செத்துப் போயிட்டதா சொல்லிதான் நான் நேத்து லீவு போட்டேன்!”
- சாதிக்

“எதிர்க்கட்சிக்காரங்க இந்த அளவுக்கு ஏட்டிக்குப் போட்டியா பண்ணக்கூடாது தலைவரே!”
”என்னய்யா ஆச்சு?”
“நீங்க இலவச திருமணம் செஞ்சு வெச்ச ஜோடிக்கெல்லாம் அவங்க இலவச விவாகரத்து வாங்கிக் கொடுக்கப் போறாங்களாம்!”
- தஞ்சை அனார்கலி

“அடுத்த வாரம்தானே போர்..! அதுக்கு ஏன் இப்பவே கவலைப்படறீங்க மன்னா?”
“சாகுற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்னு ரஜினி சொன்ன பன்ச் டயலாக் உங்களுக்குத் தெரியாதா தளபதியாரே?”
- அறந்தாங்கி என்.ராஜேந்திரன்

“தலைவர் தினம் தினம் ஒரு பொதுக்கூட்டத்துல பேசிக்கிட்டிருக்காரே, ஏன்?”
“கேக்குறதுக்கு யாருமில்லேங்கிற தைரியம்தான்!”
- பா.ஜெயக்குமார்

“அந்த நடிகர் தன் உடம்புல தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்குன்னு பல மொழிகள்ல பச்சை குத்திட்டிருக்காரே, ஏன்?”
“பாடி லாங்வேஜ் முக்கியம்னு டைரக்டர் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டார்!”
- எஸ்.முகம்மது யூசுப்

“பிசினஸ் எனக்கு இன்னொரு மனைவி மாதிரி..!”
“தொழில் மேல உங்களுக்கு அவ்வளவு ஆர்வமா?”
“ஊஹூம்..! பிசினஸ்ல நான் அந்த அளவுக்கு நிறைய அடி வாங்கிட்டேன்!”
- கே.ஆனந்தன்

“ஐசியு-ல அட்மிட் ஆகியிருந்த உங்க மாமியார் இப்ப எப்படி இருக்காங்க?”
“சிகிச்சை பலனின்றி... உயிர் பிழைச்சுட்டாங்க!”
- பர்வதவர்த்தினி

“இவங்களை டெஸ்ட் பண்ணிப் பார்த்ததுல...”
“எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க, டாக்டர்! இவங்க என் மாமியார்தான்!”
- அ.ரியாஸ்

“கேடி கந்தன் ரொம்பப் பயந்த சுபாவம் உள்ளவனோ?”
“ஏன் கேக்கறே?”
“ரிட்டையர்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்குக்கூட மாமூல் தர்றானே?”
- அதிரை புகாரி

ன்ன, முப்பது ஜோக்குகளையும் படித்துவிட்டீர்களா? நன்றி!

போட்டியைச் சற்று விளக்கமாக, விரிவாக அறிவிக்க வேண்டியுள்ளது. இந்தப் பதிவில் இடம் இல்லை; இப்போது எனக்கு நேரமும் இல்லை (இரவு மணி
11:30) என்பதால், பரிசுப் போட்டியை இப்போதே அறிவிக்க இயலாததற்கு வருந்துகிறேன். எனவே, இதே வலைப்பூவுக்கு நாளை இதே நேரத்துக்கு மேல் வருகை தருமாறு உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

போட்டி அறிவிப்பு ஒரு நாள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்!


***

அனுமதி வாங்குவதைவிட மன்னிப்பு பெறுவது எளிது - பல சமயங்களில்!

14 comments:

Chitra said...

Hilarious!
ha,ha,ha,ha....

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Vijay Ramaswamy said...

நல்ல கலெக்ஷன் ......சிரிப்பை அடக்கமுடியவில்லை ....நன்றி

ஜிஎஸ்ஆர் said...

என்ன சார் நானும் போட்டியில கலந்துக்க நினைச்சு வந்தேன், நல்ல இருந்துச்சு சார் அதிலும் பேரணும் தாத்தாவும் ஜோக் பிடித்திருந்து

என்றும் அன்புடன்
ஞானசேகர்

அனு said...

ஜோக்ஸ் எல்லாமே நல்லா இருக்கு.. இந்த அறிவிப்பும் ஜோக்ஸ்-ல ஒன்னு இல்லையே???

ஜீவன்பென்னி said...

வெய்ட்டிங் சார்.

அமைதி அப்பா said...

மகிழ்ச்சி, நல்லபதிவு.


//“கொடுத்த டாக்டர் பட்டத்தை தலைவர் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டார்?”
“அவர் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கிறதாலே, அவருக்கு வக்கீல் பட்டம்தான் வேணுமாம்!”//

நல்ல நையாண்டி..


//“தாத்தா! என் டீச்சர் வராங்க. சட்டுனு ஓடிப்போய் ஒளிஞ்சுக்க. சீக்கிரம்!”
“என்னம்மா குழந்தே! உன்னோட டீச்சர் வரதுக்கு, நான் ஏம்மா ஒளியணும்!”
“இல்ல தாத்தா! அவங்க கிட்டே நீங்க செத்துப் போயிட்டதா சொல்லிதான் நான் நேத்து லீவு போட்டேன்!”//

இதே மாதிரி ஜோக் ஓன்று நான் படித்த மாதிரி ஞாபகம்..

தாத்தாவும், ஆசிரியரும்...

"என்ன சார், நீங்க இறந்து போயிட்டதால ஸ்கூல் லீவ் விட்டுட்டதா, எங்க பேரன் மத்தியானமே வந்த்துட்டானே?!"


"அட நீங்க ஒன்னு, நீங்க செத்துப் போயிட்டதாச் சொல்லித்தான் அவன் லீவ் வாங்கிகிட்டு வந்தான்!"

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

எனக்கு எப்பவுமே விகடன்ல மன்னர் ஜோக்ஸ் தான் புடிக்கும். ரசித்தேன் சார்!

Arputharaj Samuel said...

எனது ஓட்டு இவர்களுக்கே

1. அ.அப்துல்காதர்
2. எம்.அசோக்ராஜா
3. லீலாஜி
4. தமிழ்
5. சாதிக்
arputhaa@yahoo.co.in

கிருபாநந்தினி said...

புத்தகப் பரிசுகளை அள்ளி வழங்கும் தங்களுக்கு ‘புத்தகம்தந்தான்’ என்கிற பட்டத்தை வழங்கி மகிழ்கிறேன்.
இதோ, என் ரசனை வரிசை:
1. தஞ்சை தாமு, 2. அ.ரியாஸ், 3.ஓரியூர் சேகர், 4. சி.பி.செந்தில்குமார், 5. சாரதிடேச்சு

கே.ராஜலட்சுமி said...

தஞ்சை தாமு
வி.சாரதிடேச்சு
வைகை ஆறுமுகம்
ஓரியூர் கே.சேகர்
சி.பி.செந்தில்குமார்
- இவர்களே என் தேர்வு!

- கே.ராஜலட்சுமி,
பெங்களூரு.

Anonymous said...

All jokes are very nice.
I vote for the following joke writers: Thanjai Thamu, S.A.Karunanidhi, K.Kalaivanan, V.Vishnusekar, Leelaji,
Thank you.

S.Raghuraman,
Coimbatore.

கணேஷ் ராஜா said...

சார், ஜோக் போட்டி நல்லாருக்கு. நான் இன்னியிலேர்ந்து உங்க ஃபாலோயரா மாறிட்டேன்கிறதை மகிழ்ச்சியோட தெரிவிச்சுக்கறேன்.
தஞ்சைதாமு, சாரதிடேச்சு, சி.பி.செந்தில்குமார், லீலாஜி, சாதிக் இந்த 5 பேருக்கும் என் ஓட்டு!

Anonymous said...

சிவம், தமிழ், சாதிக், அதிரை புகாரி, அ.ரியாஸ் ஆகிய ஐந்து பேர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன்.

அ.காமராசு,
சிதம்பரம்.