புத்தகப் பரிசுகள் யார் யாருக்கு?

‘ரசிகன்’ தொடருக்கு ஒரு ரசிகனாக இருந்து சென்ற மாதம் நான் நடத்திய ‘ம.செ. ஓவியம் - கண்ணதாசன் பாடல் போட்டி’யில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு விடைகளைப் பின்னூட்டம் மூலம் உடனடியாக அனுப்பிய வலைப்பூ நேயர்கள் அனைவருக்கும் நன்றி..! நன்றி..!

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘ரசிகன்’ தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருப்பீர்கள்; நீங்கள் எனக்கு எழுதியனுப்பிய விடைகளில் எத்தனை சரி என்பதையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘ரசிகன்’ தொடரைப் பார்க்க இயலாதவர்களுக்காக சரியான விடைகளைக் கீழே தந்திருக்கிறேன்.

முதல் படத்துக்குரிய பாடல்... ‘அமைதியான நதியினிலே ஓடும்...’
2-வது படத்துக்குரிய பாடல்... ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’
3-வது படத்துக்குரிய பாடல்... ‘ராமனின் மோகனம், ஜானகி மந்திரம்...’
4-வது படத்துக்குரிய பாடல்... ‘வாழ நினைத்தால் வாழலாம்...’

முதன்முதலாகப் பின்னூட்டம் இட்ட சொக்கன் இந்த நான்கு பாடல்களையுமே சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். அவருக்கு நான்கு புத்தகங்கள் பரிசு. சொக்கன் தவிர, நான்கு பாடல்களையும் சரியாகக் கண்டுபிடித்திருப்பவர்கள் முத்துலெட்சுமி, ஜாபர் அலி, தமிழ்ப்ரியன் ஆகியோர். இந்த மூவருக்கும்கூட தலா நான்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். (மொத்தம் 16 புத்தகங்கள்).

புத்தகப் பரிசு பெறும் மற்றவர்கள் விவரம்:

புதுகைத் தென்றல் - 1 புத்தகம்
கிருபாநந்தினி - 2 புத்தகங்கள்
எம்.எம்.அப்துல்லா - 2 புத்தகங்கள்
ஜீவ்ஸ் - 3 புத்தகங்கள்
பரிசல்காரன் - 1 புத்தகம்
சாய் கோகுல கிருஷ்ணா - 2 புத்தகங்கள்
க.நா.சாந்தி லெட்சுமணன் - 2 புத்தகங்கள்
ஸ்வாமி - 3 புத்தகங்கள்
விஜய் - 1 புத்தகம்
ராமு - 2 புத்தகங்கள்
பிரபாகர் -2 புத்தகங்கள்
அநன்யா மகாதேவன் - 1 புத்தகம்
பொன்னியின் செல்வன் - 3 புத்தகங்கள்
TBCD -2 புத்தகங்கள்
ஜோ - 2 புத்தகங்கள்
ராஜு - 1 புத்தகம்
பி.கே.ராமச்சந்திரன் - 1 புத்தகம்
பாபு - 2 புத்தகங்கள்
கதிர் - 2 புத்தகங்கள்
ஏ.கே. -2 புத்தகங்கள்
பினாத்தல் சுரேஷ் - 3 புத்தகங்கள்
அன்புடன் அருணா - 2 புத்தகங்கள்
கல்யாணி - 1 புத்தகம்
சண்முகம் - 3 புத்தகங்கள்
குமார் - 2 புத்தகங்கள்
கே.பி.ஜனார்த்தனன் - 2 புத்தகங்கள்
தட்ஸ்கூல் சுரேஷ் - 2 புத்தகங்கள்
அம்பி - 1 புத்தகம்
பத்மநாபன் - 1 புத்தகம்
மொத்தம் - 54 புத்தகங்கள்.

ஆக, மொத்தம் 70 புத்தகங்கள்.

தவிர, ‘புதுமொழி 500 புத்தகமும் தயாராகி வந்துவிட்டது.

ஏற்கெனவே ஜனவரி 29 பதிவில் நான் சொல்லியிருந்தபடி கிருபாநந்தினி, ரோஸ்விக், பின்னோக்கி மூவருக்கும் ‘புதுமொழி 500’ புத்தகத்தை தலா ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன்.

இந்த அத்தனைப் புத்தகங்களும் இந்த வார இறுதிக்குள்ளாக தபால் மூலம் அவரவர்களின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

முக்கியக் குறிப்புகள்:

1. ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்டு பின்னூட்டம் அனுப்பிய பலரிடமிருந்து (சுமார் 20 பேர்) அஞ்சல் முகவரிகள் எனக்கு வந்து சேரவில்லை. என் இ-மெயிலுக்குத் தங்கள் முகவரிகளை அனுப்பி வைக்காதவர்கள் இப்போதேனும் உடனடியாக அனுப்பி வைத்தால், கையோடு அத்தனை பேருக்கும் ஒட்டு மொத்தமாக பரிசுப் புத்தகங்களை தபாலில் அனுப்பி வைக்க எனக்கு எளிதாக இருக்கும். என்னுடைய நெருக்கடியான வேலைகளுக்கு நடுவே, புத்தகங்களை தபாலில் தனித்தனி செட்டாக அனுப்புவது என்பது எனக்குக் கொஞ்சம் சிரமமானது.

புத்தகப் பரிசு பெற்றவர்கள் வெளிநாடுகளில் வசிப்பவராக இருந்தால், சிரமம் பாராது தங்களின் இந்திய முகவரியை அனுப்பினால் உதவியாக இருக்கும்.

2. இங்கே கொடுத்திருக்கும் விகடன் பிரசுர புத்தகங்களின் (புதுமொழி 500 தவிர) படங்கள் சும்மா லே-அவுட்டுக்குதான்! இதே புத்தகங்களைத்தான் அனுப்பி வைக்கப்போகிறேன் என்று யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் புத்தகங்களாகவும் இருக்கலாம்; அல்லது, வேறு ஏதாவது புத்தகமாகவும் இருக்கலாம். விகடன் பிரசுரத்தில் தயாராக என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதைப் பொறுத்தே அவற்றை என்னால் அனுப்ப இயலும்.

3. எம்.எஸ்.குமரவேல் மாணிக்கம் என்பவர் தமது முகவரியை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், ‘ரசிகன்’ போட்டிக்கான பதிலை அவர் பின்னூட்டம் மூலம் அனுப்பி வைக்கவில்லை. எனவே, அவர் இது குறித்து விளக்கமாக எனக்கு பதில் எழுதினால் நல்லது.

4. ‘ரசிகன்’ போட்டியை முழுக்க முழுக்க என் ஆர்வத்துக்காகவும், என் வலைப்பூ நேயர்களுக்காகவும் மட்டுமே நடத்தினேன். இதில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு என் சொந்தச் செலவில் புத்தகம் அனுப்புவதாகக் குறிப்பிட்டிருந்தேன். எனினும், இந்த வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வரும் ‘ரசிகன்’ தொடரின் இயக்குநர் மணிவண்ணன் இதில் தனது பங்களிப்பும்கூட இருக்கவேண்டும் என்று விரும்பினார். அவரையோ, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விஜயகுமாரையோ கலந்துகொண்டு நான் இந்தப் போட்டியை அறிவிக்கவில்லை என்பதால், இதற்கான செலவு முழுவதையும் நானே ஏற்பதுதான் தார்மிக ரீதியில் நியாயமானது என்று சொல்லியும், இதில் தங்களின் பங்கும் இருக்கவேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார். ஓர் அளவுக்கு மேல் மறுப்பது அவரது அன்பையும் ஆர்வத்தையும் அலட்சியப்படுத்துவதாகிவிடுமோ என்ற அச்சத்தால் ஒப்புக்கொண்டு இருக்கிறேன். இது பற்றிய விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்.

5. ‘மாதத்துக்கு ஒன்று என்ற அளவில் இந்த ஆண்டு முழுக்கக் குறைந்தபட்சம் 15 புத்தகங்களையாவது பரிசளிக்க எண்ணியுள்ளேன்’ என்று எனது முந்தைய பிரிவில் குறிப்பிட்டிருந்தேன். ‘ரசிகன்’ போட்டிக்கு மட்டுமே நான் பரிசளித்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 70. (தபால் செலவு உள்பட இதற்கான மொத்தச் செலவு ரூ.3,500-ஐத் தொடும் என நினைக்கிறேன்.) எனவே... இனி போட்டிகள் எதுவும் கிடையாது என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். கண்டிப்பாக போட்டிகளும் அறிவிக்கப்படும்; புத்தகப் பரிசுகளும் வழங்கப்படும். குறிப்பாக, என் வலைப்பூக்கள் இரண்டையும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு!


***

வாக்குறுதிகள் குழந்தைகளைப் போன்றவை. உருவாக்குவது சந்தோஷமானது; வெளியிடுவது சிக்கலானது; காப்பாற்றுவது கடினமானது!

26 comments:

♠ ராஜு ♠ said...

நன்றி.

உங்கள் மெயில் ஐடி ஃப்ரபைலில் இல்லையே..!

Kalyani said...

Wow... I am so excited... Thanks a lot Sir. Looking forward to more competitions. Thanks again for doing this amidst your tight schedule.

Chitra said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் போட்டிகள் அறிவித்து பரிசு வழங்கி ஊக்குவிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு போட்டியை வைத்து , அதற்க்கு உங்கள் சொந்த செலவிலேயே புத்தக பரிசு தந்து ஊக்கபடுத்துகிறிர்கள் ..நன்றியும் வாழ்த்தும் . கடைசி நிமிடத்தில் பங்கேற்றேன் .. எனக்கும் ஒரு புத்தகம் ...
முகவரி அனுப்பிவிட்டேன் .

விஜய் said...

மிகுந்த நன்றியும் அன்பும் சார்

விஜய்

butterfly Surya said...

வேலை பளுவால் வலைப்பக்கம் வர இயலவில்லை.

பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

நன்றி சார்.

ர‌கு said...

வ‌ட‌ போச்சே.....அடுத்த போட்டியில‌ க‌ல‌ந்துக்க‌றேன்:)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

பரிசு அறிவிப்பிற்கு நன்றி!விகடன் பிரசுரப்புத்தகங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட உண்டு.இருந்தாலும் போட்டியில் கிடைக்கும் பரிசுக்கு தனி மரியாதையும்,சந்தோசமும் உண்டு.
நன்றி

புதுகைத் தென்றல் said...

பரிசுக்கு நன்றி,

நிகச்சியை ரசித்துப்பார்த்தேன். அப்துல் ஹமீது அவர்களின் அழகான தொகுப்பு. என் பிள்ளைகளும் இந்த ஓவியங்களை என்னுடன் பக்கத்தில் அமர்ந்து பார்த்திருந்தார்கள். சஸ்பென்சாக நாங்கள் மூவரும் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

பரிசல்காரன் said...

Standing ovation!

Swami said...

ரசனையான போட்டிக்கும்
மேன்மையான
பரிசுக்கும் நன்றிகள் பல.

செல்வேந்திரன் said...

வாக்குறுதிகள் குழந்தைகளைப் போன்றவை. உருவாக்குவது சந்தோஷமானது; வெளியிடுவது சிக்கலானது; காப்பாற்றுவது கடினமானது!

பதிவுக்குப் பொருத்தமான பொன்மொழி அல்லவா?!

அன்புடன் அருணா said...

ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது....இவ்வளவு ஆர்வமாக சொந்தப் பணத்தில் எங்களை ஊக்குவிக்கிறீர்களே...
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!.

thatscoolsuresh said...

ஒரு போட்டி அறிவித்து சொந்த காசில் பரிசும் தருகிறேன் என்று வாக்களித்து, அதுவும் முதல் போட்டியிலேயே 70 புத்தகங்கள் பரிசளிக்க முன்வந்து 3500 ருபாய் வரை செலவு செய்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு...

HATS OFF SIR!

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" பாடல் தான் முதலில் ஊகிதத்தது.
இறுதியில் தவறாக பதிலிட்டுவிட்டேன்.

ஒரு வடை போச்சு!

கடைசி பாடல் விரல் நக நுனி வரை வந்து டைப்பும் போது தவறிவிட்டது.

இரண்டாவது வடையும் போச்சு!

ஏன் சார்.. நிகழ்ச்சியில் இடை இசை எல்லாம் கொடுத்து உதவினார்கள்!

உங்கள் வாசகர்களுக்காக நீங்களும் இடை இசை கொடுத்திருக்கலாம்.
என்ன ஒன்று புத்தகம் 700 ஐ தாண்டியிருக்கும்!

உங்கள் மூலமாக இதோ
ம.செ. வின் உயிர் ஓவியங்களுக்கு என் வணக்கங்கள் சார்.

-அன்புடன் சுரேஷ்

thatscoolsuresh said...

" அன்புடன் அருணா said...
ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது....இவ்வளவு ஆர்வமாக சொந்தப் பணத்தில் எங்களை ஊக்குவிக்கிறீர்களே...
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்."

ரிப்பீட்டேய்........

thatscoolsuresh said...

சார் மீண்டும் உங்கள் மூலமாக ரசிகன் இயக்குனருக்கு ஒரு தாழ்மையான suggestion?

கண்ணதாசன் வரிகளுக்கு இப்போதை விட மேலும் இனிமை சேர்க்கும் குரல்களை தேடலாமே அல்லது சேர்க்கலாமே?

ஞாயிறு தூக்கம் தொலைத்து பார்க்கிறேன்! consider sir!

கிருபாநந்தினி said...

\\கண்டிப்பாக போட்டிகளும் அறிவிக்கப்படும்; புத்தகப் பரிசுகளும் வழங்கப்படும். குறிப்பாக, என் வலைப்பூக்கள் இரண்டையும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு!// தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; முன்பு ஒரு பதிவில் உங்கள் வலைப்பூக்களைப் பிரபலப்படுத்துவதற்காகத்தான் இத்தகைய போட்டிகளை அறிவிக்கிறீர்கள் என்று ஒரு சக வலைப்பதிவர் குறிப்பிட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்தீர்கள். ஆனால், மேலே உள்ள உங்கள் சமீபத்திய பதிவின் வரி அவர் சொன்னதைத்தானே ஊர்ஜிதப்படுத்துகிறது?

ரவிபிரகாஷ் said...

என்ன ராஜு இப்படிச் சொல்லிட்டீங்க? ரசிகன் போட்டி அறிவித்த பதிவிலேயே என் இ-மெயிலைத் தந்து இதற்கு உங்கள் பதிலை அனுப்புங்கள் என்று சொல்லியிருக்கிறேனே! சரி, உங்களுக்காக மீண்டும் என் இ-மெயில் முகவரி இதோ: nraviprakash@gmail.com

ரவிபிரகாஷ் said...

கல்யாணி, சித்ரா, பத்மநாபன், விஜய், பட்டர்ஃப்ளை சூர்யா அனைவருக்கும் நன்றி!

ரவிபிரகாஷ் said...

ரகு! வட போச்சே என்று கவலைப்பட வேண்டாம். இன்னும் அடுத்தடுத்து வடைகள் சுட்டுப் போடப்படும். :)

ரவிபிரகாஷ் said...

க.நா.சாந்தி லெட்சுமணன், புதுகைத் தென்றல், பரிசல்காரன், ஸ்வாமி ஆகியோருக்கு நன்றி! இதுக்கெல்லாம் standing ovation-னா? கூச்சமா இருக்குதுங்க பரிசல்!

ரவிபிரகாஷ் said...

ஆமாம் செல்வா! ‘என் டயரி’ பதிவுகளின் இறுதியில் வெளியிட்டு வரும் பொன்மொழிகள் கிட்டத்தட்ட அந்தப் பதிவுக்குப் பொருத்தமாக இருப்பது போல்தான் பார்த்துக்கொள்கிறேன்.

ரவிபிரகாஷ் said...

அன்புடன் அருணா, தட்ஸ் கூல் சுரேஷ் இருவருக்கும் நன்றி!

ரவிபிரகாஷ் said...

கிருபாநந்தினி! நீங்கள் கேட்டிருப்பது நியாயம்தான். சிம்பிளாக ஒரு பதில் சொல்கிறேன். என் வீட்டுக்கு நிறையப் பேர் வரவேண்டும் என்பதற்காக நான் விருந்து அளிப்பதில்லை; ஆனால், என் வீட்டுக்கு வருபவர்களுக்குத்தானே நான் விருந்து கொடுக்க முடியும்? பதில் புரிகிறதா?

கி.மணிவண்ணன் said...

அன்புள்ள திரு.ரவிபிரகாஷ் அவர்களுக்கு..

முதலில் என் சார்பாகவும் ரசிகன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் சார்பில் தங்களுக்கும் தங்களது வலைப்பூ ரசிகர்களுக்கும்..இதயம் நிறைந்த நன்றியும், வணக்கமும்..
இளம் தலைமுறையின் படைப்புகளை அங்கீகரித்து வாழ்த்துவதும்.. கூடவே அதனை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் தாங்கள் செய்யும் ஒரு அற்புத பணி..இன்னும் சொல்லப்போனால் என் முகத்தைகூட இன்னும் நீங்கள் பார்த்ததில்லை.. தொலைபேசுவது மட்டும்தான்..

வலைப்பூ நண்பர்களையும் ரசிகன் நிகழ்ச்சியை ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.. தங்களை போன்ற அனுபவமிக்க ஒருவரிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த ஆதரவு எனக்கும் ரசிகன் நிகழ்ச்சிக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமை.

எங்களையும் புத்தகப்பரிசளிப்பதற்கு தங்களோடு இணைத்துக்கொண்டதற்கு நன்றிகள் பல..

தட்sகூல்சுரேஷ்-இன் ஆலோசனைக்கு நன்றி.. ரசிகர்களில் நன்றாக பாடுபவர்கள் பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் சரி செய்கிறோம் .. அனைவரும் விமர்சித்தால் நிகழ்ச்சி சிறப்புறும்..

அனைவருக்கும் மீண்டும் நன்றியும் வணக்கமும்..

இதனை தங்கள் ப்ளாக்-இல் பின்னூட்டம் செய்ய வேண்டும்..

அன்புடன்,
கி.மணிவண்ணன்,
இயக்குனர், ரசிகன்

ஜாபர் அலி said...

அன்புத் தோழருக்கு,

எனது இந்திய விலாசத்திற்குத் தாங்கள் அனுப்பிய 4 புத்தகங்களும் வந்து சேர்ந்ததாக எனது தாயார் அறிவித்தார்கள். தங்கள் பரந்த உள்ளத்திற்கு நன்றி.