மனைவிக்கான ஹெர்னியா அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, இன்று கடைசித் தையல் பிரித்து, பூரண நலம் என்று அருள்வாக்கு சொன்னார் டாக்டர் ஆர்.செல்வமணி.
அறுவைச் சிகிச்சைக்கு ஆன மொத்த மருத்துவச் செலவு ரூ.53,000. இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமான படிவங்களைப் பூர்த்தி செய்து டாக்டரிடம் கையெழுத்துக் கேட்டபோது, கையெழுத்திட்டுவிட்டு, “இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைக்க வழியில்லை. ஏற்கெனவே உங்கள் மனைவிக்கு சிசேரியன் செய்திருப்பதால், இந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட வாய்ப்பு இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். பிறகு உங்கள் அதிர்ஷ்டம்!” என்றார்.
மற்றபடி, எனது முந்தின பதிவைப் பார்த்துவிட்டு உடனடியாக எனக்கு போன் செய்து மனைவியின் உடல்நலம் பற்றி அக்கறையோடு விசாரித்த நட்பு வட்டம் அனைத்திற்கும் இந்தச் சமயத்தில் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனைவி பூரண குணம் பெற வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருக்கும் நல்லிதயங்கள் அனைத்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள்!
***
இனி, போட்டி!
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9:30-க்கு ஒளிபரப்பாகும் ‘ரசிகன்’ தொடர் பற்றி முன்பே எழுதியிருந்தேன். அதில் கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி மட்டும் தொடர்ந்து 9 வாரங்களுக்கு ஒளிபரப்பாகும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அது தொடர்பாக இங்கே ஒரு போட்டியை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
கண்ணதாசன் பற்றிய ஒன்பது வார நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக, அந்தத் தொடரின் இயக்குநர் மணிவண்ணன், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு புதுமையைச் செய்யவிருக்கிறார். கண்ணதாசனின் திரைப் பாடல்களிலிருந்து நான்கு பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை ஓவியர் மணியம்செல்வனிடம் கொடுத்து, ஒவ்வொரு பாடலைப் படித்ததும் அவர் மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கேற்ப ஒவ்வொரு படம் வரைந்து தரும்படி கேட்டிருந்தார். மணியம்செல்வனும் அதன்படி நான்கு படங்களை வரைந்து கொடுத்துள்ளார்.
அவை, வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று ’ரசிகன்’ தொடரில் காண்பிக்கப்பட்டு, அங்கே கூடியிருக்கும் ரசிகர்களிடம் அந்தப் படங்களுக்கான பாடல்கள் என்ன என்று கேட்கப்படும். சின்ன க்ளூவும் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.
அநேகமாக, அந்த நிகழ்ச்சியின் இறுதியிலேயே அந்தப் படங்கள் எந்தெந்தப் பாடல்களைக் குறிக்கின்றன என்கிற விடையும் அறிவிக்கப்பட்டுவிடும்.
இங்கே, ‘என் டயரி’ வலைப்பூ நேயர்களுக்கு நானே முன்னதாக அந்தப் போட்டியை அறிவிக்க விரும்புகிறேன்.
மணியம்செல்வன் வரைந்து கொடுத்த அந்த நான்கு படங்களையும் கீழே கொடுத்துள்ளேன். கூடவே, ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறு க்ளூவும் கொடுத்துள்ளேன். படங்களைக் கவனமாகப் பாருங்கள். கண்ணதாசனின் எந்தத் திரைப்பாடலை அந்தப் படம் குறிக்கிறது என்று கண்டுபிடியுங்கள். பாடல்களின் முதல் வரியை மட்டும் எனக்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்யுங்கள்.
ஞாயிற்றுக்கிழமையன்று மேற்படி புதிருக்கான விடைகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும் என்பதால், வருகிற சனிக்கிழமைக்குள் வருகிற பின்னூட்டங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலும்.
இதோ, அந்த நான்கு படங்கள்:
1. புயலுக்குப் பெரிய பெரிய தென்னை மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்துவிடும்; ஆனால், நாணல் புற்கள் விழாது. அது போல, அனுசரித்துப் போகும் பக்குவப்பட்ட மனதுடையவர்கள் ஒருநாளும் வீழ்ந்துபோக மாட்டார்கள் என்கிற கருத்தை உள்ளடக்கிய பாடலுக்கான படம் இது.
2. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய மிக உருக்கமான வாழ்க்கைத் தத்துவப் பாடல் இது.
3. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் கே.ஜே.ஜேசுதாஸும் எஸ்.ஜானகியும் பாடிய பாடல் இது. இன்னொரு முக்கியக் குறிப்பு: படத்தின் ஹீரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
4. மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண காதல் பாட்டுதான். ஆனால், கவலையின்றி வாழ்வது எப்படி என்கிற ரகசியத்தை இந்தப் பாடலில் ஆறே வரிகளுக்குள் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன்.
யார் யார் எத்தனைப் பாடல்களைக் கண்டுபிடித்து எழுதுகிறார்களோ அத்தனைப் புத்தகங்களை (விகடன் பிரசுரம்) அவர்களுக்கு என் அன்புப் பரிசாக உடன் அனுப்பி வைக்கிறேன். ஒரே ஒரு பாடலைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது என்றாலும், உடனே உங்கள் விடையைப் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். உங்கள் பதில் சரியாக இருந்தது என்றால், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புத்தகம் என் அன்பளிப்பாகக் கிடைக்கும்.
உங்கள் விடைகளைப் பின்னூட்டமாக இடுவதில் சில முக்கிய நிபந்தனைகள்:
1. நீங்கள் கண்டுபிடித்த பாடலின் முதல் வரியை (மூன்று, நான்கு வார்த்தைகள்) முழுதாக எழுத வேண்டும்.
2. நீங்கள் நான்கு பாடல்களையுமே கண்டுபிடித்துவிட்டாலும் சரி, அல்லது ஒரே ஒரு பாடலைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது என்றாலும் சரி; உங்கள் விடைகளை ஒரே ஒரு பின்னூட்டம் மூலமாகத்தான் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். முதல் பாடலுக்கான விடையை ஒரு பின்னூட்டத்திலும், இரண்டாம் பாடலுக்கான விடையை அடுத்த பின்னூட்டத்திலும் எனத் தனித்தனியாக அனுப்பக்கூடாது. அப்படி ஒருவரிடமிருந்தே இரண்டு மூன்று பின்னூட்டங்கள் வந்தால், அவற்றில் எந்தப் பின்னூட்டத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் சரியான விடைகளைச் சொல்லியிருக்கிறாரோ அத்தனைப் புத்தகங்கள் மட்டுமே அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே, உங்கள் விடைகளை நன்கு யோசித்து ஒரே ஒரு பின்னூட்டம் மூலமாகப் பதிவிடுங்கள்.
3 விகடன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்களுக்கும், ஓவியர் மணியம்செல்வன் மற்றும் ‘ரசிகன்’ இயக்குநர் மணிவண்ணனோடு தொடர்பு உள்ளவர்களுக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை.
4. வருகிற சனிக்கிழமை இரவுக்குள் (27-2-10) உங்கள் பின்னூட்டங்களைப் பதிவிட வேண்டியது அவசியம். ஒருக்கால், எதிர்பாராதவிதமாக ‘ரசிகன்’ தொடரில் மேற்படி ஓவிய நிகழ்ச்சி அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போடப்பட்டாலும்கூட, இதன் பின்னூட்டங்களுக்கான இறுதித் தேதி மாற்றியமைக்கப்பட மாட்டாது.
5. பின்னூட்டத்தில் விடைகளை அனுப்பும்போது உங்கள் முகவரியைத் தெரிவிக்க வேண்டாம். கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும், இந்தப் படங்களுக்குரிய சரியான திரைப்பாடல்கள் உங்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது, நீங்கள் சரியான விடையைத்தான் எனக்குப் பதிவிட்டிருக்கிறீர்கள் என்று அறிந்தால், உடனே உங்கள் முழுமையான அஞ்சல் முகவரியை nraviprakash@gmail.com என்கிற எனது இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அன்பளிப்புப் புத்தகம் சடுதியில் உங்கள் வீடு தேடி வரும்.
முக்கியக் குறிப்புகள்:
1. நான் அறிவிக்கும் இந்தப் போட்டிக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேபோல, ‘ரசிகன்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், விகடன் நிறுவனத்துக்கும்கூட இதோடு எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என் சந்தோஷத்துக்காக, நானும் ஒரு கண்ணதாச ரசிகன் என்கிற முறையில் அறிவிக்கிற போட்டி. இதற்கான முழுப் பொறுப்பும் என்னைச் சேர்ந்தது.
2. எந்த லாப நோக்கோடும் இந்தப் போட்டியை நான் நடத்தவில்லை. வெற்றி பெறுகிறவர்களுக்கு என் சொந்தச் செலவில் புத்தகங்களை வாங்கி, என் அன்பளிப்பாக அனுப்பவிருக்கிறேன்.
3. குலுக்கல் முறை ஏதும் இல்லை. சரியான விடை எழுதும் அத்தனை பேருக்குமே புத்தகப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.
4. சில சமயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எனக்கு வந்து சேரவில்லை என்பதைப் பிற்பாடு அவர்கள் அனுப்பிய இரண்டாவது பின்னூட்டம் மூலமும் இ-மெயில் மூலமும் அறிய நேர்ந்திருக்கிறது. ஆகவே, இப்படியான எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. எனவே, இந்த விஷயத்தில் என் மனச்சாட்சியின் தீர்ப்பே இறுதியானது.
ALL THE BEST!
***
பெறுகிற பொருளைவிட, அதைப் பெறுவதிலும் கொடுப்பதிலும் கிடைக்கும் சந்தோஷமே நிஜமான பரிசு!
பெறுகிற பொருளைவிட, அதைப் பெறுவதிலும் கொடுப்பதிலும் கிடைக்கும் சந்தோஷமே நிஜமான பரிசு!
53 comments:
தங்கள் மனைவியார் நலம் பெற்றதுபற்றி மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து திரும்பியது இன்னும் பெரிய மகிழ்ச்சி!
இப்போது போட்டிக்கு வருகிறேன் :)
(இளைய)ராஜா சம்பந்தப்பட்ட மூன்றாவது பாடல்மட்டும் சட்டென்று தெரிகிறது - ’ராமனின் மோகனம், ஜானகி மந்திரம், ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்’
இரண்டாவது பாடல் ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்ற வரி இடம்பெற்ற ’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை’ என்ற பாடல்தானே?
முதல் பாடல் ’தென்னை இளம்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது தென்னைதனைச் சாய்த்துவிடும்
புயலாக வரும் பொழுது, ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது காற்றடித்தால் சாய்வதில்லை, கனிந்த மனம் வீழ்வதில்லை’ என்ற வரிகளைக் கொண்ட ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாடல். சரியா? :)
கடைசிப் பாடல்தான் இந்த வரிசையிலேயே எனக்கு மிகப் பிடித்தது ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் சோலை ஆகும், ஆசை இருந்தால் நீந்தி வா’. சரிதானே? :)
உங்கள் புண்ணியத்தில் கண்ணதாசனுடன் கொஞ்ச நேரம் நீந்தமுடிந்தது. இதுவே பெரிய பரிசுதான். நன்றி :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
தங்கள் மனைவியார் நலம் பெற்றதுபற்றி மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து திரும்பியது இன்னும் பெரிய மகிழ்ச்சி!
இப்போது போட்டிக்கு வருகிறேன் :)
(இளைய)ராஜா சம்பந்தப்பட்ட மூன்றாவது பாடல்மட்டும் சட்டென்று தெரிகிறது - ’ராமனின் மோகனம், ஜானகி மந்திரம், ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்’
இரண்டாவது பாடல் ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்ற வரி இடம்பெற்ற ’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை’ என்ற பாடல்தானே?
முதல் பாடல் ’தென்னை இளம்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது தென்னைதனைச் சாய்த்துவிடும்
புயலாக வரும் பொழுது, ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது காற்றடித்தால் சாய்வதில்லை, கனிந்த மனம் வீழ்வதில்லை’ என்ற வரிகளைக் கொண்ட ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாடல். சரியா? :)
கடைசிப் பாடல்தான் இந்த வரிசையிலேயே எனக்கு மிகப் பிடித்தது ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் சோலை ஆகும், ஆசை இருந்தால் நீந்தி வா’. சரிதானே? :)
உங்கள் புண்ணியத்தில் கண்ணதாசனுடன் கொஞ்ச நேரம் நீந்தமுடிந்தது. இதுவே பெரிய பரிசுதான். நன்றி :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
உங்கள் மனைவியின் உடல் பூரண குணம் அடைந்தது மகிழ்ச்சி.
நல்லா யோசிச்சு போட்டிக்கு பதில் போடறேன்
உங்களது இந்த அற்புத முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார்.
திறமையானவர்களுக்கு இந்த பரிசு கிடைக்க என் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இதுபோல் ஊக்குவியுங்கள்..
இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் கானக்கந்தர்வன் யேசுதாஸ், ஜானகி குரல்களில் மெய்மறக்கச் செய்யும் அந்தப் பாடல் “ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்,”
இந்த பின்னூட்டம் மட்டும்தான் போட்டிக்கு. நன்றி
தங்கள் மனைவியின் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, பூரண குணம் பெற்றதில் மகிழ்ச்சி! அதே போல், ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவைப் படித்ததிலும் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டுள்ள ம.செ. படங்களைப் பார்த்தேன். முதல் மற்றும் நான்காம் படங்களுக்கான பாடல்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.
1. அமைதியான நதியினிலே ஓடம்...
2. வாழ நினைத்தால் வாழலாம்...
புத்தகப் பரிசு கிடைத்தால் மகிழ்வேன்.
முதல் படம் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்.
இரண்டாம் படம் : மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா.
மூன்றாம் படம் : இராமனின் மோகனம், ஜானகி மந்திரம்.
முதல் மூன்றும் கண்டு பிடித்துவிட்டேன்.
1- அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அலவிள்ளாத வெள்ளம் வந்தால் ஆடும்
2 - நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
3 - ராமனின் மோகனம், ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்
தெய்வீகமே உறவு
4 - தெரியவில்லை.
நன்றி :)
3) ராமனின் மோகனம்...
2nd song Ninaithathellam nadanthu vittal theiyvam edhumillai, 3rd song- raamanin moganam, janaki mandhiram
2nd song- Ninaithathellam nadandhu vittaal theiyvam edhumillai, 3rd song Raamanin mohanam jaanaki mandhiram
1.அமைதியான நதியினிலே ஓடம்.
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
2.மயக்கமா? தயக்கமா? மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
3.ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் சங்கமம்
4.சொர்க்கத்தின் திறப்பு விழா
புதுச்சோலைக்கு வசந்த விழா
(எங்கள் வீட்டில் தனியார் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.அதனால் தயவு செய்து சரியான விடைகளைத் தங்கள் தளத்திலேயே வெளியிடுங்கள்.)
1.amaidhiyana nadhiyinile oodam.2.mayakkama kalakkama 3.ramanin moganam janaki mandhiram.4.vazha ninaithal vazhalam vazhiya illai bhoomiyil.
1. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
2. மயக்கமா கலக்கமா
3. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
முதல் பாடல் " அமைதியான நதியினிலே ஓடம், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
மூன்றாவது பாடல் " ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
நன்றி நண்பரே
அய்யா,
இதுதான் எனது முதல் மூன்று பாடலுக்கான விடை.
1. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
2. மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா
3. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
பிரபாகர்.
சார்,
கார்த்தாலேயே பார்த்துட்டேன்.
ஆனா பாருங்க, ஒரு பாட்டுகூட தெரியலை. அதான் தெரிஞ்ச மட்டும் எழுதலாம்ன்னு.
3. ராமனின் மோஹனம் ஜானகி மந்திரம்
மத்தெதெல்லாம் சந்தேகம் தான்
1.மயக்கமா தயக்கமா, மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
2.எங்கிருந்தாலும் வாழ்க
4.குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா..
1.
அமைதியான நதியினிலே ஓடும்,
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஓதுங்கிநின்றால் வாழும்
தென்னை இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது
தென்னைதனை சாய்த்துவிடும்
புயலாக வரும்பொழுது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடிநிற்கும் நாணல் அது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை
திரைப்படம் : ஆண்டவன் கட்டளை
பாடியவர்கள் : டி.எம்.எஸ், சுசீலா
---------------------------------
---------------------------------
2.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
திரைப்படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
---------------------------------
---------------------------------
3.
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயனம் பாராயனம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழு மேகம்
திரைப்படம் : நெற்றிக்கண்
Second song: Nilave ennidam nerungathe..... my all time favorite...
1. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
3. ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
1.அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அழவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் -ஆண்டவன் கட்டளை
2.மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமை தாங்கி
3.ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் - நெற்றிக்கண்
First song - ninaipadhellam nadandhuvittal????
2.மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல்தோறும் வேதனையிருக்கும்.
3..ராமனின் மோகனம்,ஜானகி மந்திரம்.ராமனின் மோகனம்,ஜானகி மந்திரம். ராமாயணம், பாராயணம் காதல் மங்களம்... தெய்வீகமே ...உறவு....
4. காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை...
நன்றி.
அமைதியான நதிஇநேலிய ஓடம் - ஓடம் அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண்டவன் கட்டளை
ராமசந்திரன் B K
G 4, Sundari Appartments
No 1 - First Street
Perumalpuram
Tirunelveli
1.அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அழவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் -ஆண்டவன் கட்டளை
2.மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமை தாங்கி
3.ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் - நெற்றிக்கண்
1 அமைதியான நதியினிலே ஓடம் ஓடும் அளவில்லாதெ வெள்ளம் வந்தால் ஆடும்
2.நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
3 ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்
4. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
(இது சரியான்னு தெரியல) மீதி எல்லாமே ஓரளவுக்கு சரியாதான் பொருந்தி வருது.
சுவராஸ்யமா இருந்தது நன்றி.
கதிர்
1 அமைதியான நதியினிலே ஓடம் ஓடும் அளவில்லாதெ வெள்ளம் வந்தால் ஆடும்
2.நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
3 ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்
4. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
(இது சரியான்னு தெரியல) மீதி எல்லாமே ஓரளவுக்கு சரியாதான் பொருந்தி வருது.
சுவராஸ்யமா இருந்தது நன்றி.
கதிர்
Hope things are ok at your end and manni is recovering well - our best wishes to her!
1. Song: Amaidhiyaana nadiyinile odam
Movie: Aandavan Kattalai (Sivaji Ganesan)
2. Song: Nilavae ennidam nerungaadhe
Movie: Ramu (Gemini Ganesan, K R Vijaya)
3. (This, I thought, was a sitter, the picture gave it away along with the Rajinikanth clue and made participate in this quiz :) )
Song: Ramanin Mohanam Janaki Mandiram
Movie: Netrikan
4. I don't know what the 4th song is - sounds like a popular one but I am not able to figure it out.
I don't have access to Kalainar TV - so I will not be watching the show, so please let me know if I got any of the answers right and the correct answer for the 4th one (if I am not able to find it by then :) ).
உங்கள் மனைவியின் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது. மன்னிக்கவும், எனக்கு முன்னமே தெரியாது அவரின் உடல்நிலை குறித்து. அவர் முழு குணமடைய என் பிரார்த்தனைகள் உண்டு.
மெடிக்ளைம் சம்பந்தமாக:
முயற்சிப்பதில் கொஞ்சம் மூர்க்கம் காட்டினால் க்ளைம் நிச்சயம் கிடைக்கும். நாவிக்களைத் தொடர்பு கொள்ளுங்கள் :)
போட்டி:
ரொம்ப தீர்க்கமாக யோசித்தும் ஒரு பதிலும் கிடைக்காதவர்களின் ‘வெல் அட்டெம்ப்டை’ பாராட்டி ஆறுதல் பரிசு வழங்கப்படுமா?! :)))
அருமையான படங்கள், இந்தப் பகிர்வுக்கும், தொடர்ந்து செய்யப்போகும் புத்தகப்பகிர்வுக்கும் நன்றி ரவிபிரகாஷ்.
என் பதில்கள்:
1. அமைதியான நதியினிலே ஓடம்:
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடிநிற்கும் நாணல் புயலில் ஆடுவதை மட்டுமின்றி, தென்னை இளங்கீற்றினில் தாலாட்டும் தென்றலையும் காட்டிய வண்ணப்பிரவாகம் அருமை.
2. எங்கிருந்தாலும் வாழ்க:
தனிமையில் நின்றவன் வந்ததும் வந்தவள் துணையுடன் வந்ததைப்பார்த்து அயரும் உணர்ச்சி!
3.ராமனின் மோகனம்:
ஒரு கோயில் மணியின் ராகத்தையும் ஒரு வானில் தவழும் மேகத்தையும் காதல் பாராயணத்தை சூழவிட்ட புத்திசாலித்தனம்.
4. வாழ நினைத்தால் வாழலாம்:
ஆழக்கடல் சோலையானது, பயணம் தொடரக் கதவு திறந்தது, கவலை தீர்க்கும் காட்சி தீர்ந்து வாழ நினைப்பது இரு பரிணாமத்தில் டைம்லைனாக!
வியப்பூட்டும் படங்கள், வித்தியாசமான அணுகுமுறை, நல்ல போட்டி. Made my day!
இது தொடர்வதற்காகப் போடப்படும் பின்னூட்டம்.
இது தொடர்வதற்காகப் போடப்படும் பின்னூட்டம்.
முதல் பாட்டு:
அமைதியான நதியினிலே ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
இரண்டாவது பாட்டு:
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
மூன்றாவது பாட்டு:
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
சரிதானே!
முதல் பாட்டு:
அமைதியான நதியினிலே ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
இரண்டாவது பாட்டு:
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
மூன்றாவது பாட்டு:
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
சரிதானே!
உங்கள் மனைவியின் பூரணநலத்துக்கு வாழ்த்துக்கள்.
பதில்கள்
1. அமைதியான நதிய்னிலே ஓடம் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ..
2.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
3.ராமனின் மோகனம் ஜான்கி மந்திரம்
4.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
உங்கள் மனைவியின் பூரண நலத்துக்கு வாழ்த்துக்கள்.
பதில்கள்
1.அமைதியான நதியினிலே ஓடம் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால்..
2.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
3.ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
4.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
Song 3 - Raamanin Mohanam from Netrikkan
I did not see earlier that I have to write a complete line in each song. These are the two songs I identified.
Song 2: Nilave ennidam nerungadhe, nee ninaikkum idathil naanillai.....
Song 3: Raamanin mohanam, jaanaki mandhiram... raamaayanam paaraayanam kaadhal mandhiram... deiveegame uravu....
Hai sir, This is shunmugam from Tuticorin mugamece@gmail.com
இதோ, அந்த நான்கு பாடல்கள்
1. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
2.
மயக்கமா கலக்கமா..மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
3.ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
4.வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
செல்வா! பின்னூட்டத்துக்கு நன்றி!
மெடிக்ளைம் சம்பந்தமாக: மூர்க்கத்தனம் என் உடன்பிறவாதது. தவிர, உடம்பில் ஒட்டுவதே ஒட்டும் என்கிற தத்துவ(!)ச் சிந்தனாவாதி நான்! :)
போட்டி: கண்டிப்பாக ஆறுதல் பரிசு வழங்கப்படும் - இன்னொரு போட்டி வடிவத்தில்! :))
கண்ணதாசன் பாடல்கள் பற்றிய போட்டி; பரிசாக புத்தகங்கள்... கலந்துதானே ஆகவேண்டும்.
இதோ எனது விடைகள்:
1. அமைதியான நதியினிலே ஓடும்
2. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.
3. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
4. வாழ நினைத்தால் வாழலாம்
அன்புடன்
hi,
1. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
2. மயக்கமா கலக்கமா..மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
3. ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
4. வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
1. அமைதியான நதியிலே ஓடம்..
3. ராமனின் மோகனம் சீதையின்..
4. கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா..
வணக்கம் தலைவரே,
இதோ போட்டிக்கான விடைகள் வரிசை முறையாக (முயன்றிருக்கிறேன்):
1.அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
2.மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
3.ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயானம் காதல் மங்கலம்...
தெய்வீகமே உறவு....
4.அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது
இங்கே
nraviprakash.blogspot.com காலத்திலிருந்தே உங்களை படிக்கிறேன்.
அனால், போட்டி, புத்தகம் பரிசு என்றவுடன் தான் பின்னூட்டம் இடுகிறேன்.
என்ன சொல்ல சார்...
இது தான் காலத்தின் கட்டாயம் போல...
இதெல்லாம் இருக்கட்டும் சார்.
ஆனந்த விகடனின் கடந்த இரண்டு பதிப்புகளில்
"பொறுப்பாசிரியர்"
"ரவிபிரகாஷ்"
என்று ஆசிரியர் குழுவினர் பெயர் பட்டியலில் தங்கள் பெயர் வருவதில்லையே?
என்ன காரணம்? யார் செய்த தாமதம்?
இது தவறுதல் நிகழ்வா இல்லை வேறு ஏதேனும் சமாச்சாரமா?
-அக்கரையுடன் சுரேஷ்
இதை அறிய வந்தவன் தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று!
சார் நீங்கள் முதலில் ஆரம்பித்த வலைப்பூவிலேயே
"சுஜாதா"
"எம்.டி.பாலசுப்ரமணியம்"
அவர்களுடனான அனுபவங்களை ஆங்காங்கே அறுசுவை உணவாக பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னீர்கள்.
அனால் இதுவரை இலை போட்டு ஊறுகாய் மட்டும் தானே வைத்திருக்கிறீர்கள்!
நீங்கள் தொடங்குங்கள் சார்
நாங்கள் தொடர்கிறோம்!
-ஆவலுடன் சுரேஷ்
அருமையான படங்கள்! நாங்களும் கண்டுபிடிக்கலாமா?.. ;-)
1. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
2. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
3. இராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
4. வாழ நினைத்தால் வாழலாம்.
தங்கள் மனைவி குணமாகவும், மெடிக்ளைம் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விடைகள்:
1) மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
2) நிலவே என்னிடம் நெருங்காதே! நீ நினைக்கும் நிலையில் நானில்லை.
3) ராமனின் மோகனம், ஜானகி மந்திரம், ராமாயணம் பாராயணம்.
4) ஙே!
முதலில் குணமாகி திரும்பியதற்கு வாழ்த்துக்கள் ... கடமை உணர்வோடு பரிசு போட்டிகள் அறிவித்துவிட்டீர்கள் .
இதில் ம. செ அவர்களின் ஓவியத்தில் மயங்கிவிட்டேன் ...அற்புதமான காட்சிகள் ..
பாட்டு தான் வராமல் நொண்டி அடிக்கிறது .. முயற்சி மட்டும் .
1 . வாழ்வே மாயமா , வெறுங்கதையா ....
2 . வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் .
3 . ராமனின் மோகனம் , ஜானகி மந்திரம் , ராமாயணம் ......
4 . நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் ......
தாங்கள் அனுப்பிய 4 நூல்களையும் பெற்றுக்கொண்டேன். நன்றியும் வணக்கமும்.
Post a Comment