ரேடியோ அண்ணா!

 

ரேடியோ அண்ணா! – 23.12.2020

‘ரேடியோ அண்ணா’ என்று போற்றப்பட்ட கூத்தபிரானின் நினைவு நாள் இன்று.

கிரிக்கெட் வர்ணனையை முதன்முதலில் தமிழில் வழங்கியவர் இவர்தான். குழந்தைகளுக்காகவே ‘கதை நேரம்’ என்றொரு நிகழ்ச்சியை உருவாக்கி நடத்தியவர். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘மனோகரா’ நாடகத்தை ஒரு மணி நேர ரேடியோ நாடகமாகத் தயாரித்து வழங்கினார்.

கல்கி, தேவன் ஆகியோரின் கதைகளை மேடை நாடகமாக்கி நடத்தியுள்ளார். சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தில் சாம்பு ஐயர் வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் ஜெய்சங்கர் சினிமாவில் நுழைவதற்கு முன் கூத்தபிரானின் நாடகங்களில் நடித்துள்ளார். ‘மெரீனா’ எழுதிய ‘கால்கட்டு’, ‘ஊர்வம்பு’ போன்ற நாடகங்களில் முக்கியப் பாத்திரமேற்று நடித்துள்ளார் கூத்தபிரான்.

பெற்றோர் மீது பெரும் பக்தி கொண்டவர் கூத்தபிரான். அப்பா விட்டல் அய்யர். அம்மா நாகலட்சுமி. அப்பா அந்நாளில் பிரபல மிருதங்க வித்வான். கலாக்ஷேத்ரா ருக்மிணி தேவியின் பரத நாட்டியத்துக்கு மிருதங்கம் வாசித்தவர். கூத்தபிரான் எப்போதும் தம் பெற்றோரின் புகைப்படத்தைத் தம் சட்டைப் பையிலேயே வைத்திருப்பார். நாடக மேடையில் நடிப்பதற்காக ஏறினாலும் அவர் பெற்றோரின் புகைப்படம் தவறாமல் அவர் சட்டைப்பையில் இடம்பெற்றிருக்கும். மேல் சட்டை அணியாமல் சாஸ்திரிகள் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டியிருந்தால், அந்தப் புகைப்படம் அவரின் கைப்பைக்குள் இருக்கும். வீடு திரும்பிய பின்னர் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து பயபக்தியுடன் பூஜை அலமாரியில் வைத்துவிடுவார்.

(கூத்தபிரான் நினைவு நாள் டிசம்பர் 23, 2014.)

0 comments: